TNPSC CCSE IV EXAM 
நான்மணிக்கடிகை தொடர்பான செய்திகள்.!

TNPSC CCSE IV EXAM
News related to four o'clock.!
Bright Zoom Tamil,



நான்மணிக்கடிகை தொடர்பான செய்திகள்...

வினா விடை வடிவில்..

Bright Zoom Tamil

1. நான்மணிக்கடிகை ........... கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

பதினெண்


2. இது ஒரு நீதி நூல் ஆகும்.


3. நான்மணிக்கடிகை என்னும்
நூல் யாரால் இயற்றப்பட்டது?

விளம்பி நாகனார் என்னும் புலவரால்  இயற்றப்பட்டது.


4. இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும்        யாரை பற்றி பாடப்பட்டுள்ளது.

-திருமாலைப்பற்றி


5. இந்நூல் ---------- இலக்கியம் என்றும் கூறப்படுகிறது.

- வைணவ


6. இந்நூல் வலியுறுத்துகின்ற
கருத்துக்கள் யாது?

பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகிய கருத்துக்களை வலியுறுத்துகின்றன.


7. கடிகை என்றால் என்ன?

கடிகை என்பதற்கு துண்டு, கட்டுவடம், ஆபரணம், நாழிகை, கரகம், தோள்வளை என்று பொருள்.



8. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் வாழ்ந்த காலம்?

4 ஆம் நூற்றாண்டு ஆகும்.


9. நான்மணிக்கடிகையில் உள்ள இரண்டு பாடல்களை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

ஜி.யு.போப்


10. இந்நூலில் இடம் பெற்றுள்ள
பாடல்கள் எண்ணிக்கை யாது?

104 - வெண்பாக்கள் + 2 கடவுள் வாழ்த்து பாடல்கள் சேர்த்து-106
பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


11. இது எப் பாவகையை சார்ந்தது?

வெண்பா என்ற பாவகையை சார்ந்தது.


12. நான்மணிக்கடிகை என்பது?

நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.


13. நான்மணிக்கடிகையில்
ஒவ்வொரு பாடலிலும் எத்தனை
கருத்துக்கள் உள்ளது?

4 கருத்துக்கள் உள்ளது.



14. நான்மணிக்கடிகை----------
என்னும் வனுப்பு வகையைச் சார்ந்தது.
அம்மை