பத்தாம் வகுப்பு தமிழ்
TNPSC பொதுத்தமிழ் வினா? விடைகள்
கவிதைப்பேழை
இரட்டுற மொழிதல்
சந்தக்கவிமணி தமிழழகனார்
குறுவினா:
1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.?
அந்தக் காலத்தில் பழங்கள் என்றால், விரும்பி உண்பார்கள். இப்போ தெல்லாம் பழங் "கள்' என்றால், விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
கூடுதல் வினாக்கள்
2. தமிழ் எவற்றோடெல்லாம் இணைத்துப் பேசப்படுகிறது?
விண்னோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும், தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது.
3. தமிழ் எவ்வாறு வளர்ந்தது?
இயல், இசை, நாடகம் என, முத்தமிழாய்த் தமிழ் வளர்ந்தது.
4. தமிழ் எவ்வாறு வளர்க்கப்பட்டது?
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என, முச்சங்கங்கள் அமைத்துத் தமிழ் வளர்க்கப்பட்டது.
5 .தமிழ் எவற்றை அணிகலன்களாகப் பெற்றது?
ஐம்பெருங் காப்பியங்களைத் தமிழ் அணிகலன்களாகப் பெற்றது.
6. தமிழைக் காத்தவர்கள் யாவர்?
சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களே, தமிழைக் காத்தவர்கள்
7. கடல் எவற்றைத் தருகிறது?
கடல், பலவகையான முத்துகளைத் தருகிறது.
8. கடல் எத்தகைய சங்குகளைத் தருகிறது?
வெண்சங்கு, சஞ்சவம், பாஞ்சசன்யம் என்ற மூன்று வகையான சங்குகளைக் கடல் தருகிறது.
9. இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
ஒரு சொல்வோ தொடரோ இருபொருள்பட வருவது, இரட்டுற மொழிதல் எனப்படும்.
10. இரட்டுற மொழிதல் வேறு எவ்வாறு அழைக்கப்பெறுகிறது?
இரட்டுற மொழிதல் "சிலேடை’ என்றும் அழைக்கப்பெறுகிறது.
11. சிலேடைகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?
செய்யுளிலும், உரைநடையிலும், மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சிறுவினா:
12. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
தமிழழகனார், தமிழையும் கடவையும் இரட்டுற மொழிதலால் சிறப்பாகப் பாடியுள்ளார்.
1. தமிழ் :
★ இயல், இசை, நாடகம் என முத்தமிழால் அமிழ்ந்து எடுக்க, முத்தினைத் தருகிறது. வளர்ந்தது.
★ முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வெண்சங்கு, சஞ்சலம், பாஞ்சசன்யம் எனும் மூன்று வளர்க்கப்பட்டது. வகைச் சங்குகளைத் தருகிறது.
★ ஐம்பெருங் காப்பியங்களால் அணிசெய்யப் பெற்றது.
2. கடல் :
★ மிகுதியான வணிகக் கப்பல்களால் சூழப்பெற்றது.
★ சங்கப் பலகையில் புலவர்களால் காக்கப்பட்டது.
★ கடலலைகளால் சங்குகள் காக்கப்பட்டன.
கூடுதல் வினா :
இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள் படுமாறு அமைக்கப்பெறுவது இரட்டுற மொழிதல் எனப்படும். இதனைச் 'சிலேடை' என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பெருமளவில் பயன்ப டுத்தப்படுகின்றன.
பாடநூல் வினாக்கள் :
பலவுள் தெரிக
1. 'மெத்த வாளிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
[விடை: அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்]
குறுவினா :
1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக ?
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணிஎன்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா;
சீனிவாசன் பாற்கடலில் துயில்கொள்கிறான்.
★ இத்தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.
◆ சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
◆ சீனிவாசகனாகிய திருமால் பாற்கடலில் துயில்கொள்கிறார்.
சிறுவினா :
1. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
பாடல் அடிகள் : 1
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
தமிழ் :
இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் வளர்ந்தது.
கடல் :
முத்தினை அமிழ்ந்து தருகிறது,
பாடல் அடிகள் : 2
முச்சங்கம் கண்டதால்
தமிழ் :
முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
கடல் :
வெண்சங்கு, சலஞ்சலம் பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
பாடல் அடிகள் : 3
மெத்த வளரிகலமும் மேவதால் (மெத்த அணிகலன்)
தமிழ் :
ஐம்பெருங்காப்பியங்கள் அணிகலனாய்ப் பெற்றது,
கடல் :
மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து சென்றது,
பாடல் அடிகள் : 4
நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்க
தமிழ் :.
சங்கப்பலகையில் அமர்ந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தனர்.
கடல் :
தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காத்தது.
கூடுதல் வினாக்கள் :
பலவுள் தெரிக :
1.தமிழ்,ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான' - இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழழகனார்
ஈ) எழில் முதல்வன்
[விடை: இ) தமிழழகனார்]
2. கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) ஐந்து
(விடை: ஆ) மூன்று]
3. கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?
ஆ) சங்கு
அ) மணல்
இ) கப்பல்
ஈ) மீனவர்கள்
[விடை: ஆ) சங்கு]
4. முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
[விடை: ஆ) கடல்]
5. தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
[விடை: ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்]
6. இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) சிலேடை அணி
(விடை: ஈ) சிலேடை அணி]
7. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
அ) இரட்டுறமொழிதல் அணி
ஆ) வேற்றுமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
[விடை: அ) இரட்டுறமொழிதல் அணி]
8. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
[விடை: ஆ) சண்முகசுந்தரம்]
9. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
அ) பத்து
ஆ) பன்ளிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
[விடை: ஆ) பன்னிரண்டு]
10. முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) தனிப்பாடல் திரட்டு
(விடை: ஈ) தனிப்பாடல் திரட்டு]
0 Comments