10 ஆம் வகுப்பு தமிழ்

கேட்கிறதா என்குரல்..!

10 ஆம் வகுப்பு தமிழ்

கேட்கிறதா என்குரல்..!

By : Bright Zoom Tamil :

குறுவினா

1. மூச்சுப்பயிற்சி குறித்துத் திருமூலர் கூறிய செய்தி யாது? 

மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.


2. காற்றைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை? 

காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி,


3. பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்ப காற்றிற்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களைக் கூறு.

தென்றல் காற்று. பூங்காற்று, கடல் காற்று, பனிக்காற்று வாடைக்காற்று. மேல் காற்று, கீழ்க்காற்று. மென் காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல் காற்று, பேய்க்காற்று. சுழல் காற்று. சூநாவளிக்காற்று.


4. கிழக்குக் காற்று குறிப்பு வரைக. (அல்லது) கொனர்டல் காற்று குறிப்பு வரைக.

கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் காற்று. மழையைத் தருவதால் மழைக்காற்று என்றும் அழைக்கப்படுகிறது.


5. மேற்குக் காற்று குறிப்பு வரைக, (அல்லது) குடக்குக் காற்று குறிப்பு வரைக.


மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசும்.வறண்ட நிலப்பகுதியிலிருந்து அழைக்கப்படுகிறது.வீசுவதால் வெப்பக்காற்று அல்லது கோடைக்காற்று


6. வாடைக்காற்று குறிப்பு வரைக.

வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று. பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப் படுகிறது.


7. தென்றல் காற்று குறிப்பு வரைக.

★தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் காற்று,

★ மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம்

குறைந்து இதமான காற்றைத் தருகிறது. 


8. நாற்றிசையின் பெயர்களையும் அவற்றின் வேறு பெயர்களையும் எழுது.

திசைகள் கிழக்கு ,மேற்கு ,வடக்கு, தெற்கு,வேறு பெயர்கள் குணக்கு ,குடக்கு ,வாடை தென்றல்


9. காற்று குறித்து சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறிய செய்தி யாது? 

தென்றல் காற்று பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வருகிறது; கூடவே வண்டுகளையும் அழைத்து வருகிறது என இளங்கோவடிகள் கூறியுள்ளார்.


10. இருவகைப் பருவக்காற்றுகள் யாவை?

தென்மேற்குப் பருவக்காற்று. வடகிழக்குப் பருவக்காற்று.


11. தென்மேற்குப் பருவக்காற்று குறிப்பு வரைக.

* ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம்,

* இவை மழைப்பொழிவினைத் தருகின்றன. இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையினை இப்பருவக் காற்று பெறுகிறோம்.


12. காற்று மாசடைவதினால் ஏற்படும் நோய்கள் யாவை?

கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய், மூளை வளர்ச்சிக் குறைவு.


13. ஓசோன் படலத்தின் பயன்களைக் கூறு.

கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களைத் தடுக்கிறது. புவியைப் போர்வை போலச் சுற்றி கதிரவனின் வெப்பத்தைக் குறைத்துக் கொடுக்கிறது.


14. ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை?

புறஊதாக் கதிர்கள் நேரடியாக உயிரினங்களைத் தாக்குவதால் மிகுந்த துன்பத்தை அடைகின்றன.  மேலும் தோலும் பாதிப்படைகின்றன.


15. அமில மழை எவ்வாறு பெய்கிறது?காற்றில் கலந்துவிடும் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து அமில மழையாகப் பெய்கிறது.


16. அமில மழையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை?

மண், நீர், கட்டடங்கள், காடுகள், நீர்வாழ் உயிரினங்கள் மிகுந்த துன்பத்திற்குள்ளாகின்றன, 


17. குளோரோ புளோரோ கார்பன் குறிப்பு வரைக,

குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் நச்சுக்காற்று குளோரோ புளோரோ கார்பன். குளோரோ புனோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு. ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும். .


16. காற்று மாசடைதலைத் தவிர்க்கும் வழிகளைக் கூறுக.

★ பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளித்தல்.

★ மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்துதல் . புதை வடிவ எரிபொருட்களைத் (கச்சா எண்ணெய், நிலக்கரி) தவிர்த்தல்.

★ சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்தாமை.

மேம்பட்ட குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுதல், .


19. ஹிப்பாலம் பருவக்காற்றின் பயன்களைக் கூறு.

★ புதிய கடல்வழி ஏற்படக் காரணமானது.

★ கிரேக்கம் - முசிறிக்கு விரைவான கடல் பயணம்..

★ யவனக் சுடல் வணிகம் பெருகியது.


20. பருவக்காற்று எவ்வாறு உருவாகிறது?

கதிரவனின் வெப்பத்தால் அடர்த்தி குறைந்து மேலே செல்லும் காற்றானது அங்கு ஏற்பட்ட  வெற்றிடத்தை நிரப்பி பருவக்காற்றாகிறது.


21. காற்றாலையின் பயன்களைக் கூறு.

மின்னாற்றலை உற்பத்தி செய்தல், நிலக்கரியின் தேவை குறைத்து கனிம வளம் பாதுகாக்கப்படல். .


22. காற்றின் ஆற்றல், வேகம் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?

★ காற்றின் ஆற்றலை, வளி மிகின் வலி இல்லை (புறம் 51) என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார். காற்றின் வேகத்தை, கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று மதுரை இளநாகளார் குறிப்பிட்டுள்ளார்.


23, இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் தென்றலை எவ்வாறு நயம்பட உரைக்கிறார்?

★ தென்றலானது பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வருகிறது.

★ அவ்வாறு வரும்போது கூடவே வண்டுகளையும் அழைத்து வருகிறது.