19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்...!!!

Bright Zoom Tamil

TNPSC தேர்வு குறிப்புகள்:

பத்தாம் வகுப்பு வரலாறு

 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் :

◆ 19 ஆம் நூற்றாண்டில் [ நவீன இந்திய வரலாற்றில் ] சமூக, சமய

◆ சீர்திருத்த இயக்கங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

◆ இந்திய மக்கள் மேற்கத்திய கருத்துக்களான பகுத்தறிதல், சமத்துவம், சுதந்திரம், மற்றும் மனிதாபிமானம் போன்ற கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டனர்.

 ◆ சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.

◆ மேற்கத்திய தாராள சிந்தனைகள் பரவியதும், சீர்திருத்த இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன.

TNPSC தேர்வு குறிப்புகள்:

1.இராஜாராம் மோகன்ராய்

2.ஹென்றி விவியன் டெரோசியோ

3.ஆத்மராம் பாண்டுரங்

4.சுவாமி தயானந்த சரஸ்வதி

5. பிளவாட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ்.ஆல்காட்

6. விவேகானந்தரும் ராமகிருஷ்ண இயக்கமும்

7.பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

8. ஜோதிபா கோவிந்தா பூலே

9. சர் சையது அகமதுகான்

10.இராமலிங்க அடிகள்

11. ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்

12. ஸ்ரீ நாராயண குரு


19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1. இராஜாராம் மோகன்ராய்

★ இராஜாராம் மோகன்ராய் நவீன இந்தியாவின் விடிவெள்ளி.

★இராஜாராம் மோகன்ராய் 1772 இல் வங்காளம் ஹூக்ளி மாவட்டத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

★இராஜாராம் மோகன்ராய் இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

★ இராஜாராம் மோகன்ராய் அரேபிக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றார். பின்னர் பாரசீகம், பிரெஞ்சு, ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், ஹூப்ரு போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

★ இராஜாராம் மோகன்ராய் ஆங்கிலம், சமஸ்கிருதம், பாரசீகம், வங்காளம் போன்ற மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்,

இராஜாராம் மோகன்ராய்:

(i). ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள்,

(ii). அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி போன்ற குறிப்பிடத்தகுந்த நூல்களை எழுதியுள்ளார்.

★ இராஜாராம் மோகன்ராய் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1814 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 

★ இராஜாராம் மோகன்ராய் முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியத்தை உயர்த்திப் பெற இங்கிலாந்து சென்றார்.

★  இராஜாராம் மோகன்ராய் அவர்களுக்கு முகலாய மன்னர் இரண்டாம் அக்பர்" இராஜா " என்ற பட்டத்தை வழங்கினார்.

★ இராஜாராம் மோகன்ராய் வங்காள மொழியில் வெளிவந்த முதலாவது வார இதழான " சம்வாத்கௌமுதி " யைத் தொடங்கினார்.

★ இராஜாராம் மோகன்ராய் 1833இல் இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் என்னுமிடத்தில் இறந்தார்.

★ இராஜாராம் மோகன்ராய் 1815 ஆம் ஆண்டு ஆத்மிய சபையைத் தொடங்கினார். பின்னர் இதுவே 1828 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.

★ " ஒரே கடவுள் " என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக பிரம்ம சமாஜம் இருந்தது.

உபநிடதங்கள், விவிலியம், குர் ஆன் போன்ற சமய நூல்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து பல்வேறு சமயத்தினரிடம் ஒற்றுமையை ஏற்படுத்த அவர் முயற்சித்தார்.

★ ஆத்மிய சபையின் பணியை மகரிஷி திபேந்திரநாத் தாகூர் ( ரவீந்திரநாத் தாகூரின் தந்தை ) மேற்கொண்டார். இவர்தான் பிரம்ம சமாஜம் என்று இச்சபைக்கு பெயர் மாற்றம் செய்தார்.

★  இந்தியாவின் தலை சிறந்த சமூக அமைப்பாக பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார். மகரிஷி திபேந்திரநாத் தாகூருக்கு கேசவ் சந்திர சென் உதவியாக. இருந்தார்.

★ கேசவ் சந்திர சென் முயற்சியால் 1872 ஆம் ஆண்டு பலதார மணமுறை, குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் கலப்புத் திருமணத்தையும், விதவைகள் மறுமணத்தையும் ஆதரித்தது.

★ 1829 இல் வில்லியம் பெண்டிங் பிரபு சதி முறையை (உடன்கட்டை ஏறுதல்) ஒழிக்க முன் வந்த போது, இராஜாராம் மோகன்ராய் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

★ 'இராஜாராம் மோகன்ராய் விதவைகள் மறுமணம், பெண்கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை போன்றவற்றை ஆதரித்தார். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சாதிமுறை பெரும் தடைக்கல்லாக இருப்பதை உணர்ந்தார். மனித குலத்தின் சமத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

★ இராஜாராம் மோகன்ராய் தாமே ஒரு முஸ்லீம் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார்.

★ '1817 இல் சமயப் பரப்பாளரான டேவிட் ஹேர் என்பவருடன் சேர்ந்து கல்கத்தாவில் இந்து கல்லூரியை ( தற் போதைய கல்கத்தா மாநிலக் கல்லூரியை நிறுவினார்.) பெண்களுக்கான பள்ளிகளையும் நிறுவினார்.


Bright Zoom Tamil

TNPSC தேர்வு குறிப்புகள்:

பத்தாம் வகுப்பு வரலாறு

 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Bright Zoom Tamil

TNPSC தேர்வு குறிப்புகள்:

1.இராஜாராம் மோகன்ராய்

2.ஹென்றி விவியன் டெரோசியோ

3.ஆத்மராம் பாண்டுரங்

4.சுவாமி தயானந்த சரஸ்வதி

5. பிளவாட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ்.ஆல்காட்

6. விவேகானந்தரும் ராமகிருஷ்ண இயக்கமும்

7.பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

8. ஜோதிபா கோவிந்தா பூலே

9. சர் சையது அகமதுகான்

10.இராமலிங்க அடிகள்

11. ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்

12. ஸ்ரீ நாராயண குரு