மனம் கவரும் மாமல்லபுரம்


ஆறாம் வகுப்பு தமிழ்

இயல் இரண்டு

மனம் கவரும் மாமல்லபுரம்

Bright Zoom Tamil :

சிறுவினா

1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்குக் காரணமான நிகழ்வு யாது?''

மாமல்லபுரம் உருவான விதம் :

மாமல்லன் கடற்கரையில் பாறையின் நிழல் யானை போலத் தெரிந்ததைப் பார்த்தான். உடனிருந்த மகேந்திரவர்மனும் கோவில் போலத் தெரிந்த பாறையின் நிழலைப் பார்த்தான். நிழலை நிஜமாக மாற்ற சிந்தித்தனர். அச்சிந்தனையில் தோன்றியதே மாமல்லபுரம். யானை, கோவில் போல் தெரிந்த பாறைகளை மட்டுமல்லாமல் அங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றினர். நந்தி, சிங்கம் என்று பாறைகளைச் சிற்பமாக மாற்றினர். இதனைத் தொடர்ந்து நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டதே மாமல்லபுரம், மாமல்லனால் உருவான நகரம் என்பதால் மாமல்லபுரம் என்ற பெயர் பெற்றது. தற்போது மகாபலிபுரம் என்று அழைக்கிறோம்.

மாமல்லபுரம் உருவானவதற்குக் காரணமான நிகழ்வு : பல்லவ அரசரான நரசிம்மவர்மன்மாமல்லன்) சிறுவனாக இருந்தபோது, கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த பாறைகளின் நிழல் யானை போலத் தெரிவதைக் கூறினான். அவருடைய தந்தையும் கோவில் போலத் தெரிந்த குன்றின் நிழலைக் காட்டினார். அப்பாறைகளைக் கோவிலாகவும் யானையாகவும் மாற்றிவிடலாம் என்ற சிந்தனை தோன்றியதால் உருவானதே மாமல்லபுரம்.


2. மாமல்லபுரத்தில் "அர்ச்சுனன் தபசு'” பாறையில் உள்ள சிற்பங்களைப் பற்றி எழுதுக.


மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு' பாறையில் உள்ள சிற்பங்கள் :

னிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற புடைப்புச் சிற்பங்கள். ஒருவர் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி வணங்குவது போல ஒரு சிற்பம். அவரது உடல் மெலிந்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போலச் செதுக்கப்பட்டிருக்கும். 'அர்ச்சுனன் தபசு என்று பெயர்


கூடுதல் வினாக்கள்

3. மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள் யாவை?

1. அர்ச்சுனன் தபசு

2. கடற்கரைக் கோவில்

3. பஞ்சபாண்டவர் ரதம்

4. ஒற்றைக்கல் யானை

5. குகைக்கோவில் 

6. புலிக்குகை

7. திருக்கடல் மல்லை

8. கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து

9. கலங்கரை விளக்கம்.


4. சிற்பக்கலை எத்தனை வகைப்படும்? அவை யாவை? 

சிற்பக்கலை நான்கு வகைப்படும். அவை

1. குடைவரைக் கோயில்கள்

2. ஒற்றைக்கல் கோயில்கள்

3. கட்டுமானக் கோயில்கள்

4. புடைப்புச் சிற்பங்கள்.