பத்தாம் வகுப்பு அறிவியல்
1. இயக்க விதிகள்
குறு வினாக்கள்:
பாட நூல் வினாக்கள்
Bright Zoom Tamil,
1. நிலையம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில் தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையே மாற்றுவதை எதிர்க்கும் தன்மை ‘நிலைமம்” என்றழைக்கப்படுகிறது. நிலையத்தின் வகைகள்
1. ஓய்வில் நிலைமம்
2. இயக்கத்தில் நிலையம்
3. திசையில் நிலையம்
2. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
விசைகளை அவை செயல்படும் திசை சார்ந்து
(1) ஒத்த இணைவிசைகள்
(2) மாறுபட்ட இணைவிசைகள் என்று வகைப்படுத்தலாம்.
3, 5N மற்றும் I5N விசை மதிப்புடைய இரு விசைகள் ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன. இலைகளின் தொகுபயன் விசை மதிப்பு யாது? எத்திசையில் அது செயல்படும்?
F¹ =5N
F ² = I5N
F = 15 - 5 =10N
தொகுபயன் விசை 15N செயல்படும் திசையில் செயல்படும்
4. நிறை – எடை இயற்றை வேறுபடுத்துக.
5. இரட்டையின் திருப்புத்திறன் வரையறு?
இரட்டைகளின் தொகுபயன் மதிப்பு சுழியாதலால் இவை நேர்க்கோட்டு இயக்கத்தினை ஏற்படுத்தாது. ஆனால் கழல் விளைவினை ஏற்படுத்தும். இதை இரட்டைகளின் திருப்பு திறன் என்கிறோர்.
6. திருப்புத்திறன் தத்துவம் வரையறு.
சமநிலையில் உள்ளபோது, ஒரு புள்ளியின் மீது செயல்படும் அனைத்து விசைகளின் திருப்பத்திறன்களின் கூடுதல் கழிக்கு சமபாகும்.
7. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது. அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகலின் அாையுர். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
8. பெரிய வாகளங்களில் திருகுமறைாளை (nuts) சுழற்றி இறக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்காடு (Spenner) பயன்படுத்துவது ஏன்?
திருகுக்குபடு நீளமான கைப்பிடியை கொண்டதாக இருந்தால் சிறிதளவே திருப்புத்திறன் விசையை செலுத்தி பயன்பாட்டை எளிதாக்கலாம்.
விசையின் திருப்புத்திறன் F x D
9. கிரிக்கெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும் போது, விளையாட்டு வீரர் நம் கையினை பின்னோக்கி இழுப்பது என்?
கிரிக்கெட் விளையாட்டில், வேகமாக வரும் பந்தினைப் பிடிக்க, விளையாட்டு வீரர் கையினை பிள்ளோக்கி இழுக்கிறார். இதனால் அவர் மோதல் காலத்தை அதிகரிக்கிறார். இது அவரது கையில் பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை குறைக்கிறது.
10. விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
விண்கலம் மிக அதிக சுற்றியக்க நிரைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார். அவரது முடுக்கம் விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால் அவர் தடையின்றி விழும் நிலையில் உள்ளார். அப்போது அவரது தோற்ற எடை கழியாகும். எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார், உண்மையில் அவர் மிதப்பதில்லை.
கூடுதல் வினாக்கள்:
11. இயந்திரவியல் வரையறு:
விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய பயிலும் அறிவியல் பாடம் இயந்திரவியல் ஆகும்.
12. இயந்திரவியலின் இரு பிரிவுகள் யாவை?
இயந்திரவியலின் இரு பிரிவுகள்.
1. நிலையியல்
2. இயங்கியல்
13. நிலையியல் வரையறு.
விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விலை வுகளை பற்றி அறியும் அறிவியல் நிலையியல் ஆகும்.
14, இயங்கியல் என்றால் என்ன?
விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் இயங்கியல் எனப்படும்.
15, இயக்கவியல் - வரையறு.
இயக்கவியல் என்பது இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டுமே விளக்குவது ஆகும்.
16. இயக்க விசையியல் என்றால் என்ன?
பொருளின் இயக்கத்தையும், அதற்கு காரணமான விசை பற்றியும் விளக்குவது இயக்க விசையியல் ஆகும்.
17. இயங்கியலின் இரு பிரிவுகள் யாவை?
இயங்கியலின் இரு பிரிவுகள்
1. இயக்கவியல்
2.இயக்க விசையியல்
18. நிலைமம் என்றால் என்ன?
ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன்செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை 'நிலைமம்’ என்றழைக்கப்படுகிறது.
19. நிலைமத்தின் வகைகள் யாவை?
அ) ஓய்வில் நிவைார்
ஆ) இயக்கத்தில் நிலையம்
இ) திசையில் நிலையம்
20, ஓய்வில் நிலைமம் என்றால் என்ன?
நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு ஓய்வில் நிலைமம் எனப்படும்.
21. இயக்கத்தில் நிலைமம் என்றால் என்ன?
இயக்க நிலையில் உள்ள பொருள், தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு இயக்கத்தில் நிலைமம் எனப்படும்.
22. திசையில் நிலைமம் என்றால் என்ன?
இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையில் இருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு திசையில் நிலைமம் எனப்படும்.
23. இயக்கத்திற்கான நிலையத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
நீளம் தாண்டுதல் போட்டியில் உள்ள போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்காக தாம் தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவதற்கு காரணம் இயக்கத்திற்கான நிலைமம் ஆகும்.
24. திசைக்கான நிலைமத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம் திசைக்கான நிலைமம் ஆகும்.
25. ஓய்வில் நிலையத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள் பழுத்தபின் விழும் பழங்கள் இவையாவும் ஓய்விற்கான நிலைமத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
26, நேர்க்கோட்டு உந்தம் என்றால் என்ன? அதன் SI அலகு யாது?
இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் உந்தம் எனப்படும். இதன் SI அலகு கிகி மீவி-1
27. நியூட்டனின் முதல் விதியை எழுதுக:
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில் தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
28, விசைகளை அவை செயல்படும் திசை சார்ந்து எவ்வாறு வகைப்படுத்தலாம்?
1. ஒத்த இணைவிசைகள்
2.மாறுபட்ட இணை விசைகள்
29, ஒத்த இணை விசைகள் என்றால் என்ன?
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள் ஒரே திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை ஒத்த இணைவிசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
30. மாறுபட்ட இணைவிசைகள் என்றால் என்ன?
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள் எதிர் இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
எதிர் திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை மாறுபட்ட இணைவிசைகள் எனப்படும்.
31. தொகுபயன் விசை என்றால் என்ன?
ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும் போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை தொகுபயன் விசை என்றழைக்கப்படுகிறது.
32. சமன் செய்யப்பட்ட விசைகன் என்றால் என்ன?
தொகுபயன் விசையின் மதிப்பு சுழி எனில் பொருள் சமநிலையில் உள்ளதென அறியலாம். இவ்விசைகள் சமன் செய்யப்பட்ட விசைகள் எனப்படும்.
33. ஈமன் செய்யப்படாத விசைகள் என்றால் என்ன?
தொகுபயன் விசை மதிப்பு சுழியில்லை எனில், அவை பொருட்களின் இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. இது சமன் செய்யப்படாத விசைகள் எனப்படும்.
34. எதிர் சமனி என்றால் என்ன?
தொகுபயன் விசைக்கு சமமான, ஆனால் எதிர் திசையில் செயல்படும் ஒரு விசையானது பொருட்களை சமநிலைக்கு கொண்டு வர உதவுகிறது. இவ்விசையை ‘எதிர் சமனி’ என்று அழைக்கிறோம்.
35. விசையின் திருப்புத்திறன் என்றால் என்ன? அதன் SI அங்கு யாது?
ஒரு புள்ளியில் செயல்படும் விசையின் திருப்புதிறன் I ஆனது, விசையின் எண்மதிப்பு F - ற்கும் நிலையான புள்ளி மற்றும் விசை செயல்படும் அச்சிற்கும் இடையே உள்ள சொங்குத்து தொலைவு d க்கும் உள்ள பெருக்கற்பலனைக் கொண்டு அளவிடப்படுகிறது. இதன் $1 அலகு Nm,
36, இரட்டை என்றால் என்ன?
இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இரு வேறு புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால் அவை இரட்டை என்றழைக்கப்படும்.
37. திருப்புதிறன்களின் தத்துவம் - வரையறு.
சமநிலையில் உள்ள போது ஒரு புள்ளியின் மீது செயல்படும் அனைத்து விசைகளின் திருப்புத்திறன்களின் கூடுதல் கழிக்கு சமமாகும்.
38. நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதியை எழுதுக.
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
39, SI .அலகு முறையில் விசையின் அலகை வரையறு.
விசையின் அலகு நியூட்டன் 1 கிலோகிராம் நிறையுடைய பொருளொன்றை 1 மீவி 2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 நியூட்டன் ஆகும்.
1 நியூட்டன் = 1 கிகி.மீM-²
40. CGSஅங்கு முறையில் விசையின் அலகை வரையறு,
விசையின் CGS அலகு டைன் ஆகும் • 1 கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 செ.மீ ²
அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 டைன் ஆகும்.
41. ஓரலகு விசை என்றால் என்ன?
1 கிலோகிராம் நிறையுள்ள பொருளொன்றை 1 மீவி 2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு நியூட்டன் ஆகும். இது ஓரலகு விசை என்றழைக்கப்படுகிறது.
42. கணத்தாக்கு விசை என்றால் என்ன?
மிகக் குறைந்த காலஅளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை, கணத்தாக்கு விசை எனப்படும்.
43. கணத்தாக்கு என்றால் என்ன?
Fஎன்ற விசை tகால அளவில் ஒரு பொருள் மீது செயல்பட்டால், ஏற்படும் கணத்தாக்கு “”ன் மதிப்பு, விசை மற்றும் கால அளவின் பெருக்கற்பவனுக்கு சமமாக இருக்கும்.
கணத்தாக்கு | = Fxt உந்த பாற்றம் அல்லது கணத்தாக்கு எவ்வாறு செயல்படலாம்?
1. பொருளின் மோதல் காலம் குறையும் போது அப்பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு அதிகமாகும்.
2. பொருளின் மோதல் கால மதிப்பு அதிகமாகும் போது அப்பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு குறையும்.
45. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியை எழுதுக.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு விசையும் எதிர்விசையும் எப்போதும் இருவேறு பொருள்கள் மீது செயல்படும். நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியை எழுதுக, புறவிசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் செயல்படும் மோத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும்.
46. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியை எழுதுக.
புறவிசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும்.
47. புவி ஈர்ப்பு முடுக்கம் என்றால் என்ள?
ஈர்ப்பு விசையினால் பொருளொன்று கீழே விழும் போது, அதன் திசைவேகம் தொடர்ந்து மாற்றம் பெறுகிறது. இது அப்பொருளுக்கு முடுக்கத்தினை ஏற்படுத்தும். இம்முடுக்கம் புவி ஈர்ப்பு விசையினால் ஏற்படுவதால் புவி ஈர்ப்பு முடுக்கம் என்றழைக்கப்படுகிறது.
48, எடை வரையறு; அலகு யாது?
ஒரு பொருள் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை என்றழைக்கப்படுகிறது.
49. தோற்ற எடை என்றால் என்ன?
ஓய்வு நிலையில் உள்ள போது உள்ள நமது உண்மை எடை மேலே அல்லது கீழே நாம் நகரும் போது அதே மதிப்பில் இருக்காது. புவி ஈர்ப்பு விசை மட்டுமின்றி, இன்ன பிற விசைகளால் ஒரு பொருளின் எடையில் மாற்றம் ஏற்படும். இந்த எடை தோற்ற எடை என்றழைக்கப்படுகிறது.
50. எடை இல்லா நிலை என்றால் என்ன?
மேலிருந்து கீழே வரும் பொருள்களின் முடுக்கம், புவி ஈர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக உள்ளபோது எடை முற்றிலும் குறைந்து கழி நிலைக்கு வருகிறது. இது 'எடையில்லா நிலை" என்றழைக்கப்படுகிறது.
.
0 Comments