பத்தாம் வகுப்பு அறிவியல்

அலகு 2. ஒளியியல்

சுருக்கமாக விடையளி:

பாடநூல் வினாக்கள்

1. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?

காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் மற்றோர் ஊடசுத்தில் ஒளியின் திசை வேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் எனப்படுகிறது.


2. ஸ்நெல் விதியைக் கூறுக.

ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு செல்லும் போது படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கும் சமம். இவ்விதி ஸ்நெவ்விதி எனப்படும்.


3. குவிஐலென்க ஒன்றில் F மற்றும் 21F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக் கப்படும் பிம்பத்திற்கான சுதிர் வரைபடம் வரைக?

பொருள் Fக்கும் எக்கும் இடையே வைக்கப்படும் போது


4. நிறப்பிரிகை வரையறு?

வெள்ளொளிக் கற்றையானது கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித்தனியாக பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு நிறப்பிரிகை எனப்படும்


5. ராலே சிதறல் விதியைக் கூறுக?

ஓர் ஒளிக் கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அவைதீகளத்தில் நான்படிக்கு எதிர்த் தாவில் இருக்கும்.


சிதறல் அளவு = ∞ 1/y³


6, குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக.


7. விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன? 

மனிதரில் ஏற்படும் வயது முதிர்வு காரணமாக சிலியரித் தசைகள் வலுவிழக்கின்றன. மேலும் விழிலென்சு தன் நெகிழ்வுத் தன்மையை இழக்கிறது. இதனால் விழியின் ஏற்பமைவுத் திறனில் குறைபாடு ஏற்படுகிறது. இது விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு எனப்படுகிறது.


8. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை? 

விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது. விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது ஈறிலாத் தொலைவில் அமையாமல் கண்ணின் அண்மைப்புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது. இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாகின்றன.


9. வாளம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது? 

சூரிய ஒளியானது வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தைவிட அதிகமாக சிதறல் அடைகிறது. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.


10. போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?

கண்ணுறு ஒளியில் சிவப்பு நிறம் மிகக் குறைந்த விலகு கோணத்தைப் பெற்றுள்ளன. எனவே அதிக தூரத்திற்கு தெளிவாக காணமுடியும். எனவே போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


கூடுதல் வினாக்கள்:


11. ஒளிவிலகல் - வரையறு.

 ஒளிக்கதிரொன்று ஓர் ஒளி புகும் ஊடகத்திலிருந்து மற்றொரு ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாக செல்லும்போது ஒளிக்கதிர் தன் பாதையில் இருந்து விலகிச் செல்கிறது. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் இந்த விலகல் ஒளிவிலகல் எனப்படுகிறது.


12. ஒளிவிலகலின் முதல் விதியை எழுதுக. 

ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது, படுகதிர், விலகுகதிர், படுபுள்ளியில் விலகல் அடையும் பரப்புக்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.