6 - ஆம் வகுப்பு தமிழ் முக்கிய பாட குறிப்புகள் மற்றும் வினா விடைகள்...!!!
Bright Zoom Tamil
பாடம் 1 :
தமிழ்த்தேன்
இன்பத்தமிழ்
''தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர் -இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்தமிழ் நல்லபுகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!"
என்ற பாடலை இயற்றியவர்
- "பாவேந்தர் பாரதிதாசன்"
6 - ஆம் வகுப்பு தமிழ் முக்கிய பாட குறிப்புகள் மற்றும் வினா விடைகள்...!!!
Bright Zoom Tamil
பாடம் 1 :
தமிழ்த்தேன் இன்பத்தமிழ்
சொல்லும் பொருளும் :
நிருமித்த - உருவாக்கிய
விளைவு - விளைச்சல்
சமூகம் - மக்கள் குழு
அசதி - சோர்வு
பாரதிதாசன் பற்றியக் குறிப்புகள் :
★பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்
★ பிறந்த ஆண்டு 29.4.1891
★ பெற்றோர் : கனகசபை - லட்சுமி பிறந்த ஊர் புதுச்சேரி
★ 16-வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
★ 1938-ல் இந்தி எதிர்ப்பு போராடத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடியது * "எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி
★ ஏழுகடல் அவள் வண்ணமடா" என்ற பாடல், இதனைப் பாரதி " ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்பு ரத்தினம் எழுதியது குறிப்பிட்டுச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.
★ பாரதிதாசன் “புரட்சிக்கவி ” என்றும் “பாவேந்தர்" என்றும் போற்றப்படுகிறார். எனக்
பாரதிதாசன் வலியுறுத்திய கருத்துக்கள் :
★ பெண்கல்வி
★ கைம்பெண் மறுமணம்
★ பொதுவுடமை
★ பகுத்தறிவு
பாரதிதாசன் இயற்றிய நூல்கள் :
★ பாரதிதாசன் கவிதை தொகுப்பு 1,2,3
★ இசை அமுது 1,2
★ பாண்டியன் பரிசு
★ எதிர்பாராத முத்தம்
★ சேர தாண்டவம்
★ அழகின் சிரிப்பு
★ குடும்ப விளக்கு
★ இருண்ட வீடு
★ குறிஞ்சித்திட்டு
★ கண்ணகி
★ புரட்சிக் காப்பியம்
★ மணிமேகலை வெண்பா
★ காதல் நினைவுகள்
★ கழைக்கூத்தியின் காதல்
★ தமிழச்சியின் கத்தி
★ அமைதி
★ இளைஞர் இலக்கியம்
★ சௌமியன்
★ நல்வ தீர்ப்பு
★ தமிழ் இயக்கம்
★ இரண்யன் அல்லது இணையற்ற வீரன்
காதலா கடமையா?
சஞ்சீவி பார்வதத்தின் சாரல்
பொதுவுடமையை வலியுறுத்துவது - சஞ்சீவி பார்வதத்தின் சாரல்
★ இயற்கையை வருணிப்பது - அழகின் சிரிப்பு
★ கற்ற பெண்களின் சிறப்பைக் கூறுவது - குடும்ப விளக்கு
★ கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது - இருண்ட வீடு
★ பில்கணியத்தின் தழுவல் புரட்சிக்காப்பியம்
★ பாரதிதாசன் உரை எழுதிய நூல் - திருக்குறள்.
★ பாரதிதாசன் நடத்திய இதழ் குயில்
★ பாரதிதாசன் மறைந்த ஆண்டு 1964
★ "அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேர்றஞன்" என்று பாரதிதாசனைப் புகழ்ந்தவர்?
- புதுமைப்பித்தன்
" தமிழே உயிரே வணக்கம்
தய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்”
என்ற பாடலை பாடியவர்
- கவிஞர் காசி ஆனந்தன்
★ நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நிலவென்று தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - தமிழெங்கள்
★ அமுதென்று என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - அமுது + என்று
★ பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் - நிலவு, மணம்
0 Comments