அண்ணல் அம்பேத்கார்

Annal Ambedkar..!


அண்ணல் அம்பேத்கார்

Mr TNPSC

தலைவர் கள் வரிசை - 1

விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் முரசு கொட்டிய பாரதியின் வரிகள்

"நிகரென்று கொட்டு முரசே - இந்த நீணிலம் வாழ்பவ ரெல்லாம் கரென்று கொட்டு முரசே - பொய்மைச்சா தி வகுப்பினை யெல்லாம்"

★அயலவர் தளையிலிருந்து விடுபடுவது மட்டுமே விடுதலையன்று.

★ சமூகக் கேடுகளிலிருந்தும் விடுபடுவதே ண்மையான விடுதலை.

★ நாட்டின் வடக்கும் தெற்கும் அத்தகு தகுதி யாய் சிரந்த சிந்தனை யாளர்களைக் கொடை யாகத் தந்திருக்கின்றன.

★ மராட்டிய கொங்கண் மாவட்டத்தில் போலி என்னும் சிற்றூர் உள்ளது. அம்பேத்கார் சிறுவனாக இருந்தபோது பள்ளிக்கு முதல் நாள் செல்வதால் அளவு கடந்த மகிழ்ச்சி.

★  ஆனால் பள்ளியில் சேர்ந்த அடுத்த நொடியிலேயே அவர் வகுப்பறையை விட்டு வெளியேறியது. 

★மகிழ்ச்சி மாணவர்களுடன் அனுமதிமறுக்கப்பட்டது. அதற்கு அவருடைய சாதி காரணமாகும். 

★ அவர் பள்ளிக்கு வரும்போது உட்காரு வதற்கு ஒரு  கோணிப்பையையும் கொண்டு வரும்படி ஆணையிட்டது பள்ளி நிர்வாகம்.

★ அதே சிறுவன் 50 ஆண்டுகளுக்குப்பின் 1947இல் மிடுக்கான உடை அணிந்த மாமனிதராக வந்து நின்றார்.

★ நாடாளுமன்றத்தில்  இந்தியாவே அவரின் வருகைக்காக கூடிநின்று எதிர்பார்த்தது. அவர்தான் அண்ணல் அம்பேத்கர்


அம்பேத்கரின் சிறப்பு

★ அம்பேத்கர் அரசியல் மறுமலர்ச்சி யின் முன்னோடி. சமத்துவக் காவலர். உலகச் சாதனை யாளர்கள் வரிசையில் முன்னிற்பவர். அரசியல் சட்டமேதை.


பிறப்பு:

★ மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர் பிறந்தார்.

தந்தையார் :  இராம்ஜி சக்பால்

தாயார் : பீமாபாய்

★ செல்வம்  நிறைந்த குடும்பத்தில்  பதினான்காவது பிள்ளையாக பிறந்தார்.

இயற்பெயர்:  பீமாராவ் ராம்ஜி

★ தந்தை அவருக்குப் பீம் எனப்   பெயர்  வைக்கக் காரணம்:

★ மாகாபாரதப் பீமனைப்போலவே தன்மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் பீம் எனப் பெயர் சூட்டினார் தந்தை இராம்ஜி சக்பால்.


கல்விக் கடல்:

★ பீமாராவின் ஆசிரியர் பெயர் அம்பேத்கர். அவர் அறிவுக்கடலாக மட்டுமன்றி அறத்தின் ஆழியாகவும் விளங்கினார்.

மேலும், 

" சாதி மதங்களைப் பாரோம் - உயர்

சென்மம் இத்தேசத்தில் எய்தினர் ஆயின்

வேதியர் ஆயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே"


★ என்னும் உயரிய நோக்குடன்   செயல்பட்டவர் ஆசிரிய அம்பேத்கர்  அவ்வாசிரியர் பெயரையே  தம்  பெயராகக் கொண்டார்.

★ 1908-இல் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் தம்முடைய பள்ளிப் படிப்பை முடித்தார்.

★  அம்பேத்கர்  ள்ளியில்   பின்னர்,  பரோடாமன்னர்  பொருளுதவுடன் 1912 இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

★அமெரிக்கா  பல்கலைக் கழகத்தில்  கொலம்பியா 1915 இல்  முதுகலைப் பட்டமும், 1916  இல் இலண்டனில்பொருளாதாரத்தில்  முனைவர் பட்டமும் பெற்றார்.

★  பின்னர்,    மும்பையில்  சிறிதுகாலம் பொருளியல்  பேராசிரியராகவும் பணியாற்றினார். 

★  மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

★ அம்பேத்கர் இந்தியா  திரும்பியப்பின்  வழக்கறிஞர்  தொழிலை  மேற்கொண்டார். ஏழைகளுக்கு  கட்டணமின்றி வழக்காடி நீதியைப்  பெற்றுத் தந்தார்.


அம்பேத்கர் சிறந்து  விளங்கிய  துறைகள்:

★  அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வாணிகம், கல்வி, சமயம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார்.

★ அம்பேத்கர் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்தைக் கல்வி கற்பதற்காகவே செலவழித்தார்.

★  நூலகத்தில் முதல் ஆளாக  நுழைவார்  மாலையில் கடைசி  வெளியேறுவார்.


முதல் உரிமைப்போர்:

★ மனித உரிமைக்காக அவர்கள்  எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். அவ்வகையில் தந்தை பெரியார் 1924 ஆம்  ஆண்டு கேரளாவில் வைக்கத்தில்  நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டமும்  முயற்சியும், 1927ஆம் ஆண்டு மார்ச்  திங்கள் இருபதாம் நாள் அம்பேத்கர்  மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில்  மனித உரிமைக்காக  முதலில் நடத்தப் பெற்ற போராட்டங்கள் எனலாம்.


விடுதலை உணர்வும் 

வட்டமேசை  மாநாடும்:

★ இங்கிலாந்து சொல்வதற்  கெல்லாம் இந்தியா  தலையசைக்கும் என்பதுதவறு.  இந்தநிலை  எப்போதே  மாறிவிட்டது. இந்தியமக்களின்  எண்ணங்களை  நீங்கள் ஈடேற்ற வேண்டும்.   என அச்சமின்றி  ஆங்கிலேயரிடம்  ஆணித்தனமாகக் கூறினார்.

★ முழுமையான விடுதலை வழங்குவதற்கு  முன்னர்த் தன்னாட்சித்  தகுதியை  இந்தியாவிற்கு  வழங்க வேண்டும்  எனவும் அம்பேத்கர் முன்மொழிந்தார்.

★ வட்டமேசை மாநாடு 1930 ஆம் ஆண்டு நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொண்ட   அண்ணல்  அம்பேத்கர்   "அரைவயிற்றுக்கஞ்சிக்கு  அல்லற்படும் ஊமைகளின்  உறுப்பினராக நான் பேசுகிறேன்"   என்று தனது கருத்தைத்  தொடங்கினார்.  ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்  வட்டமேசை மாநாட்டின் அரங்கில் எதிரொலித்தது.

சட்ட மாமேதை:

★ விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அம்பேத்கரையும் இடம்பெறச் இடம்பெறச் செய்ய வேண்டுமென்று நேரு விரும்பினார்.

★ அம்பேத்கர் சட்டசபை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

★ இந்திய அரசியல் சட்டம் அமைக்க எழுவர் கொண்ட குழு அமக்கப்பட்டது. அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியை முடித்தார்.

★ 1950 ஆம் ஆண்டு சனவரி திங்கள் இருபத்தாறாம் நாள் இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை  அறிவித்துக் கொண்டது.


கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர்:

★ அறியாமைதான் அனைத்திற்கும் மூலதனம் என்பதை உணர்ந்தார்.ஆகவே, "ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி,  செல்வமும் உழைப்பு ஆகியவை தேவைப்படுகிறது. செல்வம், உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம். உழைப்பும் கல்வியூம் அற்ற செல்வம் மிருகத்தனம்

★ கற்றல், கற்பித்தலின் உயர்ந்த குறிக்கோள் பற்றி அம்பேத்கர் கூறுவது:
கற்பித்தல்,  அறிவியல் உகந்ததாக  இருத்தல் வெண்டும்.
விருப்பு வெறுப்பற்ற முறையில் கற்பித்தல் நிகழ்தல் வேண்டும்.
மாணவனுக்குள் தகவல்களைத் திணிப்பதாகக் கல்வி இருத்தல் கூடாது.
அஃது, அவனது  ஊக்கத்தைத் தூண்டுவதுடன் தனித்தன்மையை வெளிக் கொணர்வதாக இருத்தல் வேண்டும். என்று குறிப்பிடுகிறார்.

★ அவர் 1946ஆம் ஆண்டு மக்கள் கல்விக்கழகத்தைத் தேற்றிவித்தார்
மும்பையில் அவரின் அரிய முயற்சியால்
உருவான சித்தார்த்தா  உயர்கல்வி
தோற்றுவித்தார். 

★ உயிர் கல்வி நிலையத்தில் இன்றைய வேண்டிய பாடங்களும் 
கற்பிக்கப்படுகின்றன.