அகநானூறு இலக்கிய நூல் பற்றிய எல்லா தேர்வுக்கும்மான முழுத் தகவள் குறிப்பு



அகநானூறு

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

திணை : அகத்திணை

பாவகை : ஆசிரியப்பா

பாடல்கள் : 400

பாடியோர் : 145

அடி எல்லை : 13-31

பெயர்க்காரணம்:

அகம் + நான்கு +நூறு=


அகநானூறு

அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.


வேறு பெயர்கள்:

அகம்

அகப்பாட்டு

நெடுந்தொகை நெடுந்தொகை

நெடும்பாட்டு

நானூறு

தொகுப்பு:

◆தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்

◆ தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிர பெருவழுதி


உரை, பதிப்பு:

◆நூலிற்கு முதலில் உரை எழுதியவர் =நா.மு.வேங்கடசாமி நாட்டார்

◆நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்


நூலின் மூவகை பாகுபாடுகள்:

1-120 = களிற்றியானை நிரை

121-300 = மனிமிடைப்பவளம்

301-400 = நித்திலக்கோவை


திணைப் பாகுபாடு:

1,3,5,7,9 என வருவன = பாலைத்திணை (200 பாடல்கள்)

2,8,12,18 என வருவன = குறிஞ்சித்திணை (80 பாடல்கள்)

4,14,24 என வருவன = முல்லைத்திணை (40 பாடல்கள்)

6,16,26 என வருவன = மருதத்திணை (40 பாடல்கள்)

10,20,30 என வருவன = நெய்தல் திணை


(40 பாடல்கள்)


ஒன்று மூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை; ஓதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை; அன்றியே ஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டு கூறாதவை குறிஞ்சிக் கூற்று


பாலைவியம் எல்லாம்; பத்தாம் பனிநெய்தல்  நாலு நளிமுல்லை; நாடுங்கால் மேலையோர் தேரும் இரண்டொட்டு இவைகுறிஞ்சி; செந்தமிழின் ஆறு மருதம் அகம்.


அகநானூறு குறிப்பிடும் அரசர்கள்:

அதியமான், 

எழினி, 

சோழன் கரிகாலன், 

பாண்டியன் நெடுஞ்செழியன்,

உதயஞ் சேரலாதன்,

ஆதி மந்தி,


கடவுள் வாழ்த்து:

★ இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்

★ இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்


பொதுவான குறிப்புகள்:

★ சோழர்களின் குடவோலைத் தேர்தல் முறையை பற்றி கூறுகிறது. சங்க இலக்கியங்களுள் வரலாற்று

★ செய்திகளை அதிகமாக கூறும் நூல் அகநானூறு.

★ பண்டைய தமிழ் மக்களின் திருமண விழா நடைபெறும் விதம் பற்றி கூறுகிறது.

★ அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி 20, 25ஆம் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.


பாடல் அடிகள்:

இம்மை உலகத்து இசையோடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின்றி எய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம

நாவோடு நவிலா நகைபடு தீஞ்சசொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும்

செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி

இன்றுவரல் உரைமோ சென்றிசினோர்

திறத்தென இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும்


பாலைத்திணை பாடல்

ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த

வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன

ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை

மூன்றுடன்ஈன்ற முடங்கர் நிழத்த

துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்

பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை

அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்

நெறிபடு கவலை நிரம்பா நீளிடை

வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்

செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து

உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்த்

தோளும் தொல்கவின் தொலைய நாளும்

பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி

மருந்துபிறி தின்மையின் இருந்துவினை இலனே


துறை

செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.


இப்பாடலைப் பாடியவர் ஒளவையார். அவர் சங்ககாலப் பெண்பாற்புலவருள் சிறந்து விளங்கியவர்; அவர் அதியமான் நெடுமானஞ்சி என்னும் குறுநில மன்னனுடன் ஆழ்ந்த நட்புக் கொண்டவர். அம்மன்னன் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். நீண்டநாள் வாழச் செய்யும் அமிழ்தத்தை ஒத்ததோர் அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது அதியமான் ஔவைக்கு ஈந்து மகிழ்ந்த செய்தியைப் புறநானூற்றால் அறியலாம். ஒளவையார் பாடிய பாடல்களைப் புறநானூற்றிலும், நற்றிணையிலும். குறுந்தொகையிலும் காணலாம்.


முல்லைத்திணை பாடல்

பசைப்படு பச்சை நெய்தோய்த் தன்ன சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை பகலுறை முதுமரம் புலம்பப் போகி முகைவாய் திறந்த நகைவாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை வண்டினந் தவிர்க்குந் தண்பதக் காலை வரினும் வாரா ராயினும் ஆண்டவர்க்கு இனிதுகொல் வாழி தோழி யெனத்தன் பல்லிதழ் மழைக்கண் நல்லகம் சிவப்ப அருந்துய ருடையள் அவளென விரும்பிப் பாணன் வந்தனன் தூதே; நீயும் புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி


நெடுந்தேர் ஊர்மதி வலவ

முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே,

துறை: 

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது


ஆசிரியர் குறிப்பு:


இப்பாடலை இயற்றியவர் மதுரை.... மள்ளனார் ஆவார். அவர் பெயரைத் தவிர வேறு செய்தி யாதும் தெரியவில்லை.



பெருந்தொகை நானூறு