பத்தாம் வகுப்பு தமிழ் 

இயல் -1

இலக்கணம்

எழுத்து, சொல்

இவ் இலக்கண பாடத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கியமான  ஒரு மதிப்பெண் வினா விடைகளை தொகுத்து தந்துள்ளோம்...!!

இது TNPSC அணைத்து குருப் தேர்வு மற்றும் எல்லா வகையான போட்டி தேர்வு களுக்கும் பயன்படும் விதத்தில் அமைத்து தந்துள்ளோம்..!

இதை படித்து பயன் பெருங்கள்..!!!

Bright Zoom Tamil



பத்தாம் வகுப்பு தமிழ் 

இயல் -1

இலக்கணம்

எழுத்து, சொல்

வினா விடைகள் : 


1. சொல்லின் வேறுபெயர்? 

  -  பதம், மொழி, கிளவி


2. ஓர் எழுத்து - பல எழுத்துகள் - சேர்ந்து பொருள் தருவது ?

  - சொல் எனப்படும்.


3. மொழி எத்தனை வகைப்படும்?

  - மூன்று வகைப்படும்


4. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது எவ்வகை மொழி?

   - தனிமொழி 


5. கண்,படி என்பது எவ்வகை மொழி ?

  -  தனிமொழி


6. கண். படி என்பது எவ்வகை பதம்?

  - பகாப்பதம்


7. கண்ணன். படித்தான் என்பது எவ்வகை மொழி ?

  -  தனிமொழி


8. கண்ணன், படித்தான் என்பது எவ்வகை பதம்?

  -  பகுபதம்


9, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வருவது எவ்வகை மொழி

  - தொடர்மொழி


10. தனிமொழிக்கு ஒரு சான்று தருக?

 - செல்வி படம் வரைந்தாள்


11.கண்ணன் படித்தான் என்பது எவ்வகை மொழி

  - தொடர்மொழி


12.தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமையும் மொழி எது ?

  - பொதுமொழி 


13. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பாருளையும் அச்சொல்லே தொடர்ந்து நின்று வேறு பொருளையும் தந்தால் அது எவ்வகை மொழி ?

 - பொதுமொழி


14. பொதுமொழிக்கு ஒரு சான்று தருக ?

   - எட்டு, வேங்கை, தாமரை, பலகை, அந்தமான் 


15.எட்டு என்னும் சொல் தனிமொழியாக இருக்கும்போது எப் பொருளைத் தரும்?

  - எட்டு என்ற எண்ணுப் பொருளைத் தரும்


16. எட்டு என்னும் சொல் எள்+து எனப்பிதால் எப் பொருளைத்தரும் ?

  - எள்ளை உண் என்னும் பொருளைத்தரும்.


17.வேங்கை என்னும் சொல் தனிமொழியில் எதை குறிக்கிறது ?

  - வேங்கை மரத்தைக் குறிக்கும்.


18.வேம்+கை என வேங்கை என்னும் சொல்லைப்பிரித்தால் எப் பொருள் தரும்? அது எவ்வகை மொழி ?

  -  அது வேகின்ற கை எனப் பொருள் தந்து தொடர்மொழி ஆகும். 


19.தனிமொழி, பொதுமொழி ஆகிய இரண்டிற்கும் ஒரு சொல் பொதுவாக அமைந்தால் அது எவ்வகை மொழி ?

  - பொதுமொழி 


20.ஒரு செயல் அல்லது ஒரு வினையினைக் குறிக்கும் பெயர் யாது ?

  - தொழிற்பெயர்


21. எண், இடம், காலம் ஆகியவற்றை குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருமானால் அது எவ்வகை பெயராக இருக்கும் ?

  - தொழிற்பெயராக இருக்கும்.


22.வினையடியுடன் விகுதி சேர்ந்தால் உருவாகும் தொழிற்பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

 - விகுதிபெற்ற தொழிற்பெயர் என்று அழைக்கப்படும்.


23.நடத்தல் என்னும்தொழிற்பெயரின் விகுதி 

- தல்


24,வாழ்க்கை என்னும் தொழில் பெயரின் வினையடி 

- வாழ்


25.கை என்னும் தொழிற்பெயர் விகுதியில் அமைந்த சொள் ஒன்று தருக ?

 - வாழ்க்கை 


26. சொல் விகுதிபெற்ற தொழிற்பெயர்க்குச் சான்று தருக ?

 - ஆளல் 


27. ஒரு வினையடி  ______விகுதிகளையும் ஏற்று வரும் 

- பல

28.எதிர்மறைப் பெயரில் வரும் தொழிற்பெயர் யாது ?

  - எதிர்மறைத்தொழிற்பெயர்.


29. எதிர்மறைத் தொழில்பெயருக்குச் சான்று தருக ?

 - கொல்லாமை, நடவாமை. அறியாமை.


30. ஒரு சொல்லில் வினையின் பகுதியே தொழிற்பெயராக அமைந்தால் அது ?

 - முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்.


31. முதனிலைத் தொழிற்பெயர்க்கு எடுத்துக்காட்டு

   - தட்டு, உரை. அடி. கடி. நடி


32. தட்டுதல் என்னும் விகுதிபெற்ற தொழிற்பெயரை முதனிலைத் தொழிற்பெயராக மாற்றுக ?

    - தட்டு 


33.கூடு என்னும் முதனிலைத் தொழிற்பெயரானது சூடு என முதனிலைத்திரிந்தால் அது

 - முதனிலைத்திரிந்த தொழிற்பெயர் ஆகும்.


34. ஒரு  பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும், ஏற்காமலும் வருவது ?

 - வினையாலனையும் பெயர்.


35. வினையாலணையும் பெயர் எதை காட்டி வரும் ?

  - காலம் காட்டி வரும்.


36.தொழிற்பெயர்  எவவிடத்திற்கு உரியது.

  - மூவிடத்திற்கு மட்டும்

37. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும் பெயர் எது ?

  -  வினையாலணையும் பெயர்