ஆறாம் வகுப்பு தமிழ்

இயல் ஒன்று

கவிதைப்பேழை

இன்பத்தமிழ்

Bright Zoom Tamil

நுழையும்முன்:


தாய்மொழியைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவிதங்களில் போற்றுகிறார். கண்ணே மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது உண்டு. அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம்.


தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத் 

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! 

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!' *

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் 

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் 

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் 

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

                                                   -  பாரதிதாசன்

பாடலின் பொருள் :

அமுதம் மிக இனிமையானது. அது போலவே தமிழும் இனிமையானது. அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. தமிழுக்கு நிவவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது. தமிழுக்கு மணம் என்றும் பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும். தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும். தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.


செற்பொருள் :

திருமித்த   - உருவாக்கிய

சமூகம்        - மக்கள் குழு

விளைவு   - விளைச்சல்

அசதி           - சோர்வு


நூல் வெளி :

பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார். எனவே இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார் இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.

மதிப்பீடு வினா :

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1.தாய் மொழியில் படித்தால் ............... அடையலாம்.

அ) பன்மை           

ஆ) மேன்மை 

இ) பொறுமை        

ஈ) சிறுமை

விடை : ஆ) மேன்மை


2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் .................. சுருங்கிவிட்டது.

அ) மேதினி       
ஆ) நிலா
இ) வானம்         
ஈ) காற்று

விடை: அ) மேதினி 


3.செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ)செந் + தமிழ்       

ஆ) செம் + தமிழ்

இ)சென்மை + தமிழ்  

ஈ) செம்மை +தமிழ் 

விடை : ஈ) செம்மை + தமிழ்


4. "பொய்யகற்றும்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.....

அ) பொய் + அகற்றும்

ஆ) பொய் + கற்றும் 

இ) பொய்ய + கற்றும்

ஈ)பொய் +யகற்றும்

விடை : அ) பொய் + அகற்றும்


5.பாட்டு + இருக்கும் என்பதைச்  சேர்த்து எழுதக் கிடைக்கும்சொல்........

அ)பாட்டிருக்கும் 

ஆ)பாட்டுருக்கும்

இ) பாடிருக்கும்

ஈ) பாடியிருக்கும்

விடை: அ) பாட்டிருக்கும்


6. எட்டு +  என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) எட்டுத்திசை 

ஆ) எட்டி திசை 

இ) எட்டுதிசை

ஈ) எட்டி இசை

விடை: அ) எட்டுத்திசை


இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

அ) விளைவுக்கு - பால்

ஆ) அறிவுக்கு - வேல்

இ) இளமைக்கு - நீர்

ஈ) புலவர்க்கு - தோள்


குறுவினா :

1.தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

★ தமிழ் மொழியின் செயல்கள்:  பொய்யை அகற்றும்.

★மனத்தின் அறியாமையை நீக்கும்.

★அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்திருக்கும்.

★ உயிர்போன்ற உண்மையை ஊட்டும்.

★ உயர்ந்த அறத்தைத் தரும். 6.உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளை காட்டும்.


2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்? 

செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

சிறுவினா

1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன? தமிழ் மொழி காலவெள்ளத்தை எதிர்த்து நிற்க காரணம் :

★ பலநூறு ஆண்டுகளைக் கண்டது.

★ அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்டது.


2. தமிழ்க் கும்மி பாடலின் வழி நீங்கள் அறிந்து கொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக. 

தமிழ்க் கும்மி பாடலின் வழி நாங்கள் அறிந்து கொண்டவை:

★ செந்தமிழின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவவேண்டும்.

★ பலநூறு ஆண்டுகளைக் கண்டது.

★ அறிவுஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்டது. கடல் சீற்றங்கள், கால மாற்றங்களால் அழியாமல்

★ நிலைத்திருக்கும்.

★ பொய்யை அகற்றும்.

★ மனத்தின் அறியாமையை நீக்கும்.

★ அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்திருக்கும். 

★ உயிர் போன்ற உண்மையை ஊட்டும்.

★ உயர்ந்த அறத்தைத் தரும். உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளை காட்டும்.


சிந்தனை வினா

1. தமிழ்மொழி அறியாமையை எவ்வாறுஅகற்றும் ? 

தமிழ்மொழி அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்டது. அவை பொய்யை அகற்றி, உண்மையை ஊட்டி அறியாமையை அகற்றும்.


கூடுதல் வினாக்கள் - விடைகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1.ஆழிப்பெருக்கு என்னும் சொல்லின் பொருள் 

அ)கடல்கோள் 

ஆ)உலகம்

இ)மேதினி 

ஈ) ஊழி

விடை: அ) கடல்கோள்


2. நீண்டதொரு காலப்பகுதி என்னும் சொல்லின் பொருள் 

அ)மேதினி 

ஆ) உலகம் 

இ) ஊழி 

ஈ) கடல்கோள்

ஶ்ரீவிடை: இ) ஊழி


கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. மேதினியின் மற்றொருபெயர்........

விடை: உலகம் 

2.உள்ளப்பூட்டு என்னும் சொல்லின்

விடை : உள்ளத்தின் அறியாமை 


3. கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்....

விடை: தமிழ்க்கும்மி