ஏழாம் வகுப்பு தமிழ்
இயல் 1
கவிதைப் பேழை
ஒன்றல்ல இரண்டல்ல
Bright Zoom Tamil,
ஏழாம் வகுப்பு தமிழ்
இயல் 1
கவிதைப் பேழை
ஒன்றல்ல இரண்டல்ல
ஆசிரியர் குறிப்பு :
ஆசிரியர் :
உடுமலை நாராயணகவி
இயற்பெயர் :
நாராயணசாமி
காலம் :
25.9.1899-23.5.1981
சிறப்புப்பெயர்:
பகுத்தறிவுக் கவிராயர்
பணி:
தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
சிறப்புகள் :
கலைமாமணி பட்டம், 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. உடுமலைப் பேட்டையில் சிலை மற்றும் மணிமண்டபத்தைத் தமிழக அரசு நிறுவியுள்ளது.
சொல்லும் பொருளும் :
1.ஒப்புமை - இணை
2.அற்புதம் - வியப்பு
3. முகில் - மேகம்
4. உபகாரி - வள்ளல்
5.சொல்ல - கூற
6.தென்றல் - தெற்கிலிருந்து வீசும் காற்று
7.கவி - கவிஞன் (அ) புலவன்
பாடநூல் மதிப்பீட்டு வினா :
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி
விடை : இ) பரணி
2. வானில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
விடை : ஆ) முகில்
3. 'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
விடை : ஈ) இரண்டு + அல்ல
4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
விடை : அ) தந்து + உதவும்
5. ஒப்புமை – இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்புஇல்லாத
விடை : இ) ஒப்புமையில்லாத
சிறுவினா:
1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
★ தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.
★ சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.
★ தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
2. 'ஒன்றல்ல இரண்டல்ல' - பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
" புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.
சிறுவினா :
1. தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
★ பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
★ பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் - ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.
சிந்தனை வினா :
1. தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
★ சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.
★ கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின.
★ தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.
★ குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.
★ எனவே, தமிழில் அறஇலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.
கூடுதல் வினா :
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
விடை : ஆ) பரணி
2. பொருத்துக.
1.பகைவரை வென்றதைப் பாடுவது
- அ) பரிபாடல்
2.இசைப்பாடல் - ஆ) பரணி
3. வான்புகழ் கொண்டது - இ) சங்க இலக்கியம்.
4. அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்டது - ஈ) திருக்குறள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2இ 3.ஆ 4.ஈ
விடை : அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
3. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
விடை : ஈ) உடுமலை நாராயணகவி
4. தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
விடை : ஈ) உடுமலை நாராயணகவி
5. தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்ற கவிஞர்?
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
விடை : ஈ) உடுமலை நாராயணகவி
6. முல்லைக்குத் தேர் தந்து புகழ்பெற்றவன்
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
விடை : அ) வேள்பாரி
7. புலவரின் சொல்லுக்காசுத் தன் தலையையே தரத் துணிந்தவன்
அ) வேள்பாரி
ஆ)குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
விடை : அ) வேள்பாரி
0 Comments