இனியவை நாற்பது 

(Iniyavai Narpathu)

ஆசிரியர் : பூதஞ்சேந்தனார்

பாடல்கள் : 1 + 40

பாவகை :  வெண்பா

பெயர்க்காரணம் :

இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.

கடவுள் வாழ்த்து

சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.

பொதுவான குறிப்புகள் :

★ இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.

★ பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.

★ இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 

★ நன்மைத்தரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில்  தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.

★ இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.


இனியவை நாற்பது பாடல்

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே

கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே

மயரிக எல்லாராய் மாண்புடையரைச் சேரும்

திருவுந்தீர் வின்றேல் இனிது.

குழந்தை நோயின்றி வாழ்தல் இனியது. அவைக்கு அஞ்சாது பேசுபவனின் கல்வி இனியது.

மயக்கமற்ற பெருமைமிக்கவரிடம் சேரும் செல்வம் அவரைவிட்டு நீங்காது நிலைத்திருப்பின் இனியது.

சலவரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிரக் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது

வஞ்சகரைச் சேராமல் விலகியிருத்தல் இனியது. அறிவுடையாரின் வாய்ச் சொற்களைப் பின்பற்றி ஒழுகுதல் இனிது. நிலையான உலகில் வாழும் உயிர்களெல்லாம் உரிமைப்பட வாழ்தல் இனியது.

சொற்பொருள் :

1.குழவி - குழந்தை

2.பிணி நோய் 3.மயரி மயக்கம் -

4.கழரும் - பேசும் 

5. சலவர் - வஞ்சகர்

6. மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்


முக்கிய அடிகள் :

★ ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே

★ ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது

★ வருவாய் அறிந்து வழங்கல் இனிது தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை

★ விடமென்று உணர்த்தல் இனிது