TNPSC - பொதுத்தமிழ்
பெரியார் ஈ.வெ. இராமசாமி
பற்றிய குறிப்புகள்!!
Bright Zoom Tamil
பெரியார் பற்றிய குறிப்புகள்!!
★ இயற்பெயர் - ஈ.வெ. இராமசாமி
★ பெற்றோர் பெயர் - வெங்கட்ட நாயக்கர் - சின்னத்தாயம்மாள்
★ பிறந்த ஊர் - ஈரோடு
★ காலம் - 1879 - 1973
★ பெரியார் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
★ தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.
★ இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.
★ இவர் சமூகத்தில் சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
★ மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருப்பது, கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார்.
★ இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.
★ இராமசாமி மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார்.
★ தனது 19-வது வயதில் இல்லற வாழ்வைத் துறந்தார். துறவறம் பு+ண்டு காவி உடை தரித்து, பல புனித இடங்களுக்குச் சென்று வந்தார்.
★ இவர் காசி சென்றிருந்த போது பார்ப்பனர்கள் மற்ற இனத்தவர்களை இழிவுபடுத்துவதை நேரடியாகக் கண்டு அதனைக் கடுமையாக கண்டித்தார்.
★ பின்னர் தமிழ்நாட்டிற்குத் திரும்பி, தமது கொள்கைகளைப் பரப்புவதற்காக 1919 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.
★ 1921-ஆம் ஆண்டு சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1923-ஆம் ஆண்டு அதன் தலைவரானர்.
★ ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1924 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடைப்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுத் தடைத் சட்டத்தை எதிர்த்துப் போராடியாதால் திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடைச் சட்டத்தை தளர்த்தி, அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என அறிவித்தது. இதன் காரணமாக பெரியாருக்கு 'வைக்கம் வீரர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
★ 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
★ இவருக்கு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் 'பெரியார்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
0 Comments