TNPSC - பொதுத்தமிழ்

எட்டுத்தொகைகளில் ஒன்று

ஐங்குறு நூறு  பற்றிய குறிப்புகள்!!



ஐங்குறு நூறு 

Bright Zoom Tamil


★ சங்க இலக்கிய நூல் எட்டுத்தொகையில் உள்ள எட்டு நூல்களும் தொகைநூல்களாகும் அதாவது தொகுக்கப்பட்ட நூல்கள்ஆகும்.


 ★ இது பல புலவர்கள் பாடிய பாடல்கள் ஒவ்வொரு தொகுப்பும் தனிதனியே அமைந்துள்ளது.


★ ஐந்து திணைகளை பற்றிய பாடல் தொகுப்பாகும்.


★ திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக  என 500 பாடல்களைக் கொண்டது இந்த நூல்.


★ இந் நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. 


★ இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயற்றபட்டமையால் இந் நூல் ஐங்குறு நூறு என்னும் பெயர் பெற்றது. 


★ தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.


★ தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன்.


★ முதலாவது  மருத திணை பாடல்களை பாடியவர் ஓரம்போகியார்


★ இரண்டாவது, நெய்தல் திணை பாடல்களை பாடியவர்  அம்மூவனார்


★ மூன்றாவது, குறிஞ்சி, திணை பாடல்களை பாடியவர் 

கபிலர்.


★ நான்காவது, பாலை திணை பாடல்களை பாடியவர்  ஓதலாந்தையார்.



★ ஐந்தாவது, முல்லை திணை பாடல்களை பாடியவர் 

பேயனார்.



★ ஐந்திணைகளுக்கும் திணைக்கு நூறு பாடல் வீதம் ஐநூறு பாடல்களின் தொகுப்பே

ஐங்குறு நூறு


பாடல்கள் :


1முதல் 500 வரை


முதலாவது, மருதம், ஓரம்போகியார்.


1. வேட்கைப் பத்து

2. வேழப்பத்து

3. கள்வன் பத்து

4. தோழிக்கு உரைத்த பத்து

5. புலவிப் பத்து

6. தோழி கூற்றுப் பத்து

7. கிழத்தி கூற்றுப்பத்து

8. புனலாட்டுப் பத்து

9. புலவி விராய பத்து

10. எருமைப் பத்து


இரண்டாவது, நெய்தல், அம்மூவனார்

11. தாய்க்கு உரைத்த பத்து.

12. தோழிக்கு உரைத்த பத்து.

13. கிழவற்கு உரைத்த பத்து

14. பாணற்கு உரைத்த பத்து

15. ஞாழற் பத்து

16. வெள்ளங் குருகுப் பத்து

17. சிறுவெண் காக்கைப் பத்து.

18. தொண்டிப் பத்து.

19. நெய்தற் பத்து.

20. வளைப் பத்து.


மூன்றாவது, குறிஞ்சி, கபிலர்


21. அன்னாய் வாழிப் பத்து

22. அன்னாய்ப் பத்து

23. அம்மவழிப் பத்து.

24. தெய்யோப் பத்து.

25. வெறிப்பத்து

26. குன்றக் குறவன் பத்து.

27. கேழற் பத்து

28. குரக்குப் பத்து

29. கிள்ளைப் பத்து

30. மஞ்ஞைப் பத்து.


நான்காவது, பாலை, ஓதலாந்தையார்


31. செலவு அழுங்குவித்த பத்து

32. செலவுப் பத்து

33. இடைச்சுரப் பத்து.

34. தலைவி இரங்கு பத்து.

35. இளவேனிற் பத்து.

36. வரவுரைத்த பத்து

37. முன்னிலைப் பத்து

38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து.

39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து.

40. மறுதரவுப் பத்து


ஐந்தாவது, முல்லை, பேயனார்


41. செவிலி கூற்றுப் பத்து

42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

43. விரவுப் பத்து

44. புறவணிப் பத்து

45. பாசறைப் பத்து

46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து

47. தோழி வற்புறுத்த பத்து

48. பாணன் பத்து

49. தேர் வியங்கொண்ட பத்து

50. வரவுச் சிரப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு, 

Ainkurunooru, 

Ettuthogai, 

எட்டுத்தொகை, 

Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்,Bright Zoom Tamil