10 ம் வகுப்பு சமூக அறிவியல்  முதல் உலகப்போரின் வெடிப்பும்  அதன் பின் விளைவுகளும்..!

10th Class Social Science The outbreak of the First World War and its aftermath ..!

Bright Zoom Tamil,

V. சுருக்கமான விடையளிக்கவும் :

1. சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

◆ ஜப்பான் வலிமை மிகுந்த அரசு என நிரூபித்தது.

◆ வியோடங் தீபகற்பம், ஆர்தர் துறைமுகம் - ஜப்பான் கைப்பற்றியது.


2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக?

◆  இங்கிலாந்து

◆ பிரான்சு

◆ ரஷ்யா


3. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள்

◆ இங்கிலாந்து  -  ஆரவாரமான நாட்டுப்பற்று

◆ பிரான்சு  -  அதிதீவிரமான நாட்டுப்பற்று

◆  ஜெர்மனி    - வெறிகொண்ட நாட்டுப்பற்று


4.பதுங்குக் குழிப் போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

◆ போர் வீரர்களால் தோண்டப்படுவது.

◆ எதிரிகளின் சுடுதலில் இருந்து பாதுகாக்


5. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன? 

◆ துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுத்தது.

◆ துருக்கியை நவீனமயமாக்கினார்.


6. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

◆  வெற்றி பெற்ற நாடுகளின் அமைப்பாக இருந்தது.

◆  சங்கத்திற்கென தனியாக இராணுவம் இல்லை.


VI. விரிவான விடையளிக்கவும் :


1. முதல் உலகப் போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.

(i) ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிரணி சேர்க்கைகளும் :

★ மூவர் உடன்படிக்கை - ஜெர்மனி, ஆஸ்திரியா - ஹங்கேரி, இத்தாலி. 

★ மூவர் கூட்டு நாடுகள் - இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா.


(ii) வன்முறை சார்ந்த தேசியம் :

★ ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டின் மீது வெறுப்பு தோன்றியது.

★ இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி -இல் தோன்றிய வன்முறை சார்ந்த தேசியம்.


(III) ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு :

★ ஜெர்மனி பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை. * ஜெர்மனியே உலகத்தின் தலைவன் என்றார். கப்பற்படை விரிவுபடு


(iv) பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை : 

★ 1871 இல் அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் .

★ மொராக்கோ விவகாரத்தில் பிரான்சுக்கு எதிராக ஜெர்மனி தலையிட்டது.


(v) பால்கள் போர்கள் :

முதல் பால்கன் போரில் துருக்கி தோற்கடிக்கப்பட்டது.


இரண்டாவது பால்கன் போரில் பல்கேரியா தோற்கடிக்கப்பட்டது. 


(vi) உடனடிக் காரணம்:

★ ஆஸ்திரியப் பேரரசரின் வாரிசு பிரான்ஸ் பெர்டினாண்டு படுகொலை,

★ செராஜிவோ நகரில் ஒரு செர்பியனால் கொலை செய்யப்பட்டார். 


2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடக்கையினை  கோடிட்டு காட்டுக.

★ ஜெர்மனி போர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 

★ ஜெர்மன் படை 1,00,000 வீரர்கள் என சுருக்கப்பட்டது.

★ ஜெர்மனிக்கு ஒரு சிறிய கடற்படை மட்டுமே அனுமதி. 

★ போலந்து நாடு மீண்டும் உருவாக்கப்படும்.

★ ரைன்லாந்து நேச நாடுகளின் கையில் இருக்கும்.

★ ஆஸ்திரியா - ஜெர்மனி ஒருங்கிணைப்புக்கு தடை விதித்தது.

★ அல்சேஸ் - லொனரன் பகுதிகளை பிரான்சுக்கு திருப்பித் தருதல்.

★ பிரெஸ்ட்-லிடே எக் உடன்படிக் கையை ஜெர்மனி திரும்ப பெறுதல்.


3. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.

★ 1917 இல் லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.

★ ரஷ்யாவில் புரட்சி தொடர்ந்து நடைபெற விரும்பினார். 

★ "ரொட்டி, அமைதி, நிலம்" என்று முழக்கமிட்டார்.

★ "அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே" என்றார். 

★ லெனின் உடனடிப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

★ புரட்சிப் படை அரசு கட்டிடங்களை கைப்பற்றியது. 

★ பிரதமரின் தலைமை அலுவலகங்களை கைப்பற்றியது.

★ லெனின் ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவினார்.


4. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

★ 1920 - 1925 க்கு இடையே பல பிரச்சனைகளை பன்னாட்டு சங்கம் தீர்த்து வைத்தது. 

★ சுவீடன் - பின்லாந்து பிரச்சனையில் ஆலேண்டு தீவுகள் பின்லாந்துக்குத் தரப்பட்டது.

★ போலந்து - ஜெர்மனி இடையே சைலேசியா எல்லை பிரச்சனையைத் தீர்த்து வைத்தது. 

★ கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.

★ 1925 - லொக்கர்னோ உடன்படிக்கை மேற்கு ஐரோப்பாவில் அமைதியை ஏற்படத்தியது.


VII. வரைபடப் பணி :

1.உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.

1. கிரேட் பிரிட்டன்

2. ஜெர்மனி

3. பிரான்ஸ்

4. இத்தாலி

5. மொராக்கோ 

6. துருக்கி

7.செர்பியா

8. பாஸ்னியா

9. கிரீஸ்

10. ருமெனியா

11.பல்கேரியா

12- ஆஸ்திரிய-ஹங்கேரி