ஆறாம் வகுப்பு தமிழ்

முதல் பருவம்

New 6th Standard Tamil 1st Term 

Book Back Questions

இயல் 1: தமிழ்த்தேன்

1.1. இன்பத்தமிழ்

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏற்றத் தாழ்வற்ற _____ அமைய வேண்டும்.

A. சமூகம்

B. நாடு

C. வீடு

D. தெரு

விடை :A. சமூகம்


2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ______ ஆக இருக்கும்

A. மகிழ்ச்சி

B. கோபம்

C. வருத்தம்

D. அசதி

விடை : D. அசதி


3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

A. நிலயென்று

B.நிலவென்று

C. நிலவன்று

D. நிலவுஎன்று

விடை : B. நிலவென்று


4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

A. தமிழங்கள்

B. தமிழெங்கள்

C. தமிழுங்கள்

D. தமிழ்எங்கள்

விடை : B. தமிழெங்கள்


5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

A. அமுது + தென்று

B. அமது + ஒன்று

C. அமு + தென்று

D. அமுது + என்று

விடை : D. அமுது + என்று


6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

A. செம்மை + பயிர்

B. செம் + பயிர்

C. செமை + பயிர்

D. செம்பு + பயிர்

விடை : A. செம்மை + பயிர்


II. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

1. விளைவுக்கு  –    அ) பால்

2. அறிவுக்கு       –    ஆ) வேல்

3. இளமைக்கு    –    இ) நீர்

4. புலவர்க்கு       –     ஈ) தோள்


விடை : 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ