TNPSC பொதுத்தமிழ்

வில்லிபாரதம் பற்றிய குறிப்புகள்..!

References about Villiparatham ..!

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil


காப்பிய அமைப்பு:

வட மொழி மகாபாரதத்தில் மொத்தம் 18 பருவங்கள் உள்ளன. வில்லியார், முதல் 10 பருவங்களை மட்டுமே பாடியுள்ளார்.

(1) ஆதி பருவம்

(2) சபா பருவம் 

(3) ஆரணிய பருவம்

(4) விராட பருவம்

(5) உத்தியோக பருவம்

(6) வீட்டும் பருவம்

(7) துரோண பருவம்

(8) கன்ன பருவம்

(9) சல்லிய பருவம்

(10) சௌப்திக பருவம்

ஆகியவை. மொத்தம் - 4337 பாடல்கள். 'கிருட்டிணன் தூதுச் சருக்கம்'- உத்தியோக பருவத்தில் அமைந்துள்ளது. 13 ஆண்டுகள் காட்டிலும் மறைந்தும் வாழ்ந்த பிறகு, பாண்டவர்கள் தங்களுக்கு உரிய அரசினைக் கேட்கவே, பாண்டவர் சார்பாகக் கிருட்டிணன் தூது சென்ற வரலாற்றை உணர்த்தும்பகுதி, இது.


🌼  வில்லிபாரதத்தை எழுதியவர் யார்?

- வில்லிபுத்தூரார்

🌼  வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தை தழுவித் தமிழில் இயற்றியவர் யார்? 

- வில்லிபுத்தூரார்

🌼 வில்லிபாரதம் என்ன நூலை இயற்றியவர் யார்?

-வில்லிபுத்தூரார்

🌼  வில்லிபாரதம், ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம் வரை எத்தனை பருவங்களை கொண்டது? 

- பத்துப் பருவங்கள்

🌼  வில்லிபுத்தூரார் எந்த மொழிகளில் புலமை பெற்றுத் திகழ்ந்தார்?

 - தமிழிலும் வடமொழியிலும்

🌼  வில்லிபுத்தூரார் யாரால் ஆதரிக்கப்பட்டார்? 

- மன்னன் வரபதி ஆட்கொண்டான்


🌼  மன்னன் வரபதி ஆட்கொண்டான் ஆண்டு வந்த இடம்? 

- வக்கபாகை

🌼  அறமற்ற போரிலும் செஞ்சோற்றுக்கடன் தீர்த்து அறம் காத்தவன் யார்?

 - கன்னன்

🌼 ஆவது நாள் போரில் கண்ணனின் தந்திரத்தால் அர்ச்சுனனின் வில்லடிப்பட்டுக் கன்னன் தேர்ச்சக்கரத்தில் சாய்கிறான். 

- 17 ஆவது நாள்

🌼  'தரங்கம்" எனும் சொல்லின் பொருள்?

 -  கடல்

🌼  தாயால் வந்த துயரத்தை தர்மத்தால் வென்றவன் யார்?

 - கன்னன்

🌼 கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை போன்ற சொற்களின் இலக்கணக்குறிப்பு? - பண்புத்தொகை