வேலூர் புரட்சி    (கி.பி.1806) :

Vellore Revolution (1806 AD) :

Bright Zoom Tamil,

வேலூர் புரட்சி    (கி.பி.1806) :

★ கி.பி.1801 ஆம் ஆண்டு தோன்றிய தென்னிந்தியப் புரட்சி முடிவுற்றாலும், அப்புரட்சி ஏற்படுத்திய அதிர்ச்சி மக்கள் மனதில் இருந்து அழியவில்லை. சென்னை மாகாணத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் வலிமைமிக்க சக்தியாக உருவெடுத்தது.

★ வில்லியம் பெண்டிங் பிரபு சென்னை மாகாணத்தின் ஆளுநராகவும், ஜான் கிராடக் தலைமை ராணுவத் தளபதியாகவும் இருந்தனர்.

★ ஜான் கிராடக் அறிமுகப் படுத்திய ராணுவச் சீர்திருத் தங்கள் வேலூர்ப் புரட்சிக்கு வித்திட்டது. 

புரட்சிக்கான காரணங்கள்  :

★ திப்புசுல்தானின் மரணத்திற்குப் பிறகு வேலூர்க் கோட்டையில் சிறைபடுத்தப்பட்ட திப்புசுல்தானின் உறவினர் களால் இப்புரட்சி மேற் கொள்ளப்பட்டது.

★  இப்புரட்சிக்கு மூலகாரணமாக விளங்கிய சிப்பாய்கள், பாளையக்காரர்களின் வழி வந்தவர்கள்.

★   தமிழ் மற்றும் கன்னட மொழி பேசும் பகுதியைச் சார்ந்தவர்கள். தங்களுடைய உணர்வுகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

★  இராணுவத்தில் புகுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், புதிய கருவிகள் மற்றும் சிப்பாய்களின் உடைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் வீரர்களுக்கு வெறுப்பினை அளித்தது. 

★ இந்துச் சிப்பாய்களின் காதணிகள், நெற்றியில் சமயக் குறிகள் இடுதல் போன்ற வற்றிற்குத் தடை விதிக்கப்பட்டது.

★ முஸ்லீம்கள் தங்களுடைய தாடி, மீசைகளைக் குறிப்பிட்ட அளவுதான் வை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

★ இது வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

★  தளபதி அக்னியூ என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய வகை தலைப்பாகை இந்து முஸ்லீம்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

★ இதனால் சிப்பாய்கள் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வெளிப்படையாக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 

★ புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட தலைப்பாகையை அணிய மறுத்த சிப்பாய்களுக்கு 500 முதல் 900 சாட்டையடி தண்டனையாக விதிக்கப்பட்டது.

 ★ பதவியிலிருந்தும் விலக்கப்பட்டனர்.

புரட்சியின் நிகழ்வுகள் :

★ ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட வேண்டும் என்ற இரகசியத்திட்டம், திப்புவின் மைந்தரால் தூண்டப்பட்டது.

★  திப்புவின் மகளின் திருமண நிகழ்ச்சி ஜூலை 9, 1806 ஆம் ஆண்டு வேலூர்க் கோட்டையில் நடைபெற்றது. 

★  இந்த திருமண நிகழ்ச்சியில் சிப்பாய்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

★  இந்த திருமண நிகழ்ச்சியின் போது ஜூலை 10 ஆம் நாள் அதிகாலை இந்திய சிப்பாய்கள் திடீரென ஆங்கில அதிகாரிகளையும், ஆங்கில சிப்பாய்களையும் தாக்கி, வேலூர்க் கோட்டையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 

★ அன்று அதிகாலையில் திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்பட்டு, திப்புவின் மகன் அரசராக அறிவிக்கப்பட்டார்.

★  வேலூர்க் கோட்டையின் வெளியில் இருந்த ஆங்கிலத் தளபதி கூட்ஸ், வேலூர் கோட்டை கைப்பற்றபட்ட செய்தியை உடனடியாக ஆற்காட்டில் இருந்த இராணுவ முகாமிற்குத் தெரிவித்தார். 

★  படைத் தளபதி கில்லஸ்பி தலைமையில் ஆற்காட்டிலிருந்து இராணுவம் உடனடியாக வேலூருக்கு விரைந்தது. 

★ வேலூர் கோட்டை மீண்டும் ஆங்கிலேயரால் மீட்கப்பட்டு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்தது.

தோல்விக்கான காரணங்கள் :

★ வேலூர்ப் புரட்சி தோல்வியில் முடிவடைந்தது. 

★ இதற்குப் பல்வேறு காரணங்கள் அடிப்படையாக அமைந்தன.

★ புரட்சியை நடத்த முறையான தலைமை கிடையாது. 

★ கிளர்ச்சி நன்கு திட்டமிடப்படவில்லை.

★ திப்புவின் பிள்ளைகளுக்குப் போதுமான போர்ப்பயிற்சி கிடையாது.

★ மேலும் அவர்கள்  தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்தனர்.

★ இராணுவ விரரர்களுக்கு இந்திய அரசர்களிடமிருந்து ஆதரவு மற்றும் உதவிகளைப் பெற முடியவில்லை. .

★ வேலூர்ப் புரட்சி தோல்வியில்   முடிவடைந்தது. 

★  இருப்பினும் பிற்காலத்தில் இது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. 

★  இந்திய வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

★ திப்புவின் குடும்பத்தினர் கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆறு வருடங் களுக்கு மேலாக அங்குச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

★  இந்தியர்களின் நாட்டுப்பற்று மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையும் வெளிப்பட்டன.

★  இப்புரட்சி தோல்வியில் முடிவுற்றது. 

★  இருப்பினும் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக இது அமைந்தது.