அலகு 2. விசையும் இயக்கமும்

 6 ஆம் வகுப்பு - அறிவியல்

முதல் பருவம் அலகு -2

விசையும் இயக்கமும்

Bright Zoom Tamil,

அலகு 2. விசையும் இயக்கமும்

1. இயக்கத்தின் வகைகள் யாது?

★ நேர்கோட்டு இயக்கம்

★ வளைவுப்பாதை இயக்கம்

★ வட்டப்பாதை இயக்கம்

★ தற்சுழற்சி இயக்கம்

★ அலைவு இயக்கம்

என ஐந்து வகை களாகும்.


2. நேர்கோட்டு இயக்கம்  என்றால் என்ன? உதாரணம் தருக ?

★ நேர்கோட்டு இயக்கம் - நேர்க்கோட்டு பாதையில் நடைபெறும் இயக்கம். எ.கா. நேர்கோட்டு பாதையில் நடந்து செல்லும் மனிதன், 


3. வளைவுப்பாதை   இயக்கம்  என்றால் என்ன? உதாரணம் தருக ?

★ வளைவுப்பாதை இயக்கம் - முன்னோக்கிச் சென்றுகொண்டு, தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் பொருளின் இயக்கம் எ.கா. வீசி எறியப்பட்ட பந்து

4.வட்டப்பாதை இயக்கம் என்றால் என்ன? உதாரணம் தருக ?

★ வட்டப்பாதை இயக்கம் - வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம். எ.கா. கயிற்றின் முனையில் கட்டப்பட்டு சுழற்றப்படும் கல்லின் இயக்கம்.

5.தற்சுழற்சி இயக்கம் என்றால் என்ன? உதாரணம் தருக ?

★ தற்சுழற்சி இயக்கம் - ஒரு அச்சினை மையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம். எ.கா, பம்பரத்தின் இயக்கம்.

6. அலைவு இயக்கம் என்றால் என்ன? உதாரணம் தருக ?

★ அலைவு இயக்கம் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம், எ.கா தனிஊசல்,

7. ரோபாட்டிக்ஸ் என்பது யாது?ரோபாட் என்ற வார்த்தை எவ்வாறு உருவானது?

★ ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையிலிருந்து ரோபாட் என்ற வார்த்தையானது உருவாக்கப்பட்டது. இதன் பொருள் உத்தரவுக்கு படிந்த ஊழியர் என்பதாகும். ரோபாட்டிக்ஸ் என்பது ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவாகும்.