6 ஆம் வகுப்பு தமிழ்
முதல் பருவம்
இயல் ஒன்று
தமிழ்த்தேன்
1.கவிதைப்பேழை
இன்பத்தமிழ்
6 ஆம் வகுப்பு தமிழ் இன்பத்தமிழ்
சொல்லும் பொருளும்
1. நிருமித்த - உருவாக்கிய
2. விளைவு - விளைச்சல்
3. சமூகம் - மக்கள் குழு
4. அசதி - சோர்வு
நூல் வெளி :
★ பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
★ பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயைரப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
★ தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைள உள்வாங்கிப் பாடியுள்ளார்.
★ எனேவ, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
★ இவைரப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்.
அ). சமூகம்
ஆ). நாடு
இ). வீடு
ஈ). தெரு
விடை :அ). சமூகம்
2.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ----ஆக இருக்கும்
அ).மகிழ்ச்சி
ஆ).கோபம்
இ ). வருத்தம்
ஈ ).அசதி
விடை :ஈ).அசதி
3.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ). நிலயென்று
ஆ). நிலவென்று
இ). நிலவன்று
ஈ ). நிலவுஎன்று
விடை :ஆ). நிலவென்று
4.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ). தமிழங்கள்
ஆ). தமிழெங்கள்
இ). தமிழுங்கள்
ஈ). தமிழ்எங்கள்
விடை :ஆ). தமிழெங்கள்
5.அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ). அமுது + தென்று
ஆ). அமுது + என்று
இ) . அமுது + ஒன்று
ஈ). அமு + தென்று
விடை :ஆ). அமுது + என்று
6.செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ). செம்மை + பயிர்
ஆ).செம் + பயிர்
இ). செமை + பயிர்
ஈ) . செம்பு + பயிர்
விடை : அ) .செம்மை + பயிர்
7.இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
அ). விளைவுக்கு - பால்
ஆ). அறிவுக்கு - வேல்
இ). இளமைக்கு - நீர்
ஈ). புலவர்க்கு - தோள்
விடை : இ),ஈ),அ),ஆ),
0 Comments