தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு?
50,215 சதுர மைல்
விளக்கம்::
தமிழகத்தின் பரப்பளவு சுமார் 50,215 சதுர மைல் ஆகும்..
1. தமிழக அரசின் தற்போதைய சின்னம் எது?
ஸ்ரீ வில்லிப்புத்தூர் கோபுரம்
விளக்கம்::
திருவில்லிப்புத்தூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது.தமிழ்நாடு அரசு சின்னத்தில் திருவில்லிபுத்தூர் நகரில் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்கு குறிப்பிடத்தக்க ஒரு மயில்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில் ஆகும்.
இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது.
ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிபெற்று, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இன்றும் அதன் பண்டைய மரபு மற்றும் பக்தி பங்களிப்புகளால் அறியப்படுகிறது..
தமிழகத்தின் மாநில விலங்கு எது?
நீலகிரி வரையாடு
விளக்கம்::
தமிழகத்தின் தேசிய விலங்கு 'நீலகிரி வரையாடு' ஆகும். நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது.
வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை..
தமிழகத்தின் மாநில விளையாட்டு எது?
கபடி
விளக்கம்::
கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளான ஆயர்களால் பல காலமாக, விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு(ஏறு தழுவுதல்) தயாராகும் முன் ஆயர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி.
இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர்.
மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர்.
ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.
தமிழகத்தின் மாநில மலர் எது?
செங்காந்தள் மலர்
விளக்கம்::
செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும்.
இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்..
தமிழகத்தின் மாநிலப் பறவை எது?
மரகதப்புறா
விளக்கம்::
தமிழகத்தின் மாநிலப் பறவை மரகதப் புறா. இது தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 - 11.
2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும்போது, இறகுகளும் வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது.
இதன் தலையும், கீழ்ப்பகுதிகளும் கிரைசோகுலோரா (கிரிசோகுலோரா) இனத்தில் சிவப்பு நிறத்தில் (லாங்கிராஸ்டிரிஸ் (லாங்கிரோஸ்ட்ரிஸ்) இனத்தில் மர நிறத்திலிருந்து) மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டு காணப்படுகிறது.கண்கள் கருத்தும், அழகும் கால்களும் சிவந்தும் காணப்படுகின்றன.
தமிழகத்தின் மாநில மரம் எது?
பனை மரம்
விளக்கம்::
பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.
இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது.
பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்..
0 Comments