மேட்டூர் அணையை பற்றி தெரிந்து கொள்ளல்லுங்கள்..!
★ மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934
★ அணைக் கட்ட ஆன செசலவு 4.80 கோடி
★ அணையின் நீளம் 5.300 அடி
★ அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
★ அணையின் உயரம் 214 அடி
★ அணையின் அகலம் 171 அடி
★ அணையின் சேமிப்பு உயரம் 120 அடி
★ அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சசதுர மைல்
★ 2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.
★ அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி
செய்யப்படுகிறது.
★ சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர்
தண்ணீர் போகிறது.
★ மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
★ அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள்
குடும்பங்களும் உள்ளன.
★ மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி
அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.
★ இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய்,
வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ
மீட்டர் தூரம் செல்கிறது.
★ இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.
★ இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும்,பல்வேறு
மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் ,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன்மண், மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர்
அணை என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து கட்டிக்கொடுத்த
கர்னல் டபுள்யூ.எம்.எல்லீசை, அணையும் நம் மனசும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.
0 Comments