TNPSC பொது அறிவு வரலாறு..!

குப்தப் பேரரசை நிறுவிய சமுத்திரகுப்தர்..!



★ சமுத்திரகுப்தர் , குப்தப் பேரரசை கி.பி. 335 முதல் கி.பி. 375 முடிய ஆட்சி செய்த பேரரசர்.


★ குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே ஆவர்.


★ முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட இந்தியாவை ஆட்சி செய்த சமுத்திர குப்தர்.


★ இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார்.


★ திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் இந்து சமயம், கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


★ இவரது மகன் இரண்டாம் சந்திரகுப்தர், சமுத்திர குப்தருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்.


★ ஜாவா தீவின் நூல்களில் இவரது பெயரை தாந்திரிகமந்தகர் எனக் குறித்துள்ளது.


★ சமுத்திரம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு கடல் என்று பொருள்.


★  சமுத்திரகுப்தரை அசோகருக்கு நிகராக ஒப்பீடு செய்கின்றனர்.


★ அசோகர் அமைதி மற்றும் அகிம்சையைப் போற்றியவர்.


★  ஆனால் சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.


★ முதலாம் சந்திர குப்தருக்கும் – மகாஜனபாதங்களில் ஒன்றான லிச்சாவி இளவரசி குமாரதேவிக்கும் பிறந்தவர் சமுத்திரகுப்தர். 


★ பாடலி புத்திரத்தை தலைநகராகக் கொண்ட குப்தப் பேரரசை நாற்பது ஆண்டு காலம் வரை ஆட்சி செய்தவர்.


★ இவர் இந்தி மதத்தைச் சேர்ந்தவர். இவரது வாழ்க்கைத் துணைவி தத்ததேவி ஆவார்.


★  இவரது தந்தை முதலாம் சந்திர குப்தர் மற்றும் தாய் குமாரதேவி ஆவார்.


வினா விடைகள் :


★  கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியில் ஒன்பது அரசர்களை படை பலத்தால் வென்றவர் யார்? 

- சமுத்திரகுப்தர்


★  சமுத்திரகுப்தரிடம், கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரிய இலங்கை அரசர் யார்? 

- மேகவர்மன்


★ சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் எத்தனை ஆண்டுகள் நீடித்தது? 

- நாற்பதாண்டுகள்


★ சமுத்திரகுப்தர் தனது ராணுவ வெற்றிகளை பிரகடனம் செய்ய ------------ யாகம் நடத்தினார். 

- அசுவமேத யாகம்


★ ஹரிசேனர் என்ற கவிஞரை ஆதரித்தவர் யார்? 

- சமுத்திரகுப்தர்


★ சமுத்திரகுப்தர் எந்த சமயத்தை தீவிரமாக பின்பற்றினார்? 

- வைணவ சமயம்


★ கவிதை, இசைப் பிரியரான சமுத்திரகுப்தருக்கு வழங்கப்பட்ட பட்டம்? 

- கவிராஜா


★ குப்தர் நாணயங்களில் சமுத்திரகுப்தர் எந்த இசைக்கருவியை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது?

 - வீணை


★ முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரை தனது வாரிசாக நியமித்தது எப்போது?

 - பொ.ஆ. 335 


★ சமுத்திரகுப்தர் ஆதரித்த மாபெரும் பௌத்த அறிஞர் யார்?

 - வசுபந்து