நாளந்தா பல்கலைக்கழகம்..!
Nalanda University ..!
Bright Zoom Tamil,
நாளந்தா பல்கலைக்கழகம்..!
◆ நாளாந்தா என்பதற்கு அறிவை அளிப்பவர் என்று பொருள்.
◆ இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டது.
◆ பின்வந்த ஹர்ஷவர்தனரும் இப்பல்கலைகழகத்தை ஆதாரித்தார்.
◆ நாளந்தா நகரம் பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது.
◆ இது மகாயான புத்த மதக் கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது.
◆ 1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது .
◆ இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது.
◆ இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள்.
◆ இப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.
◆ மகாயான பௌத்த தத்துவங்களுடன், வேதங்கள், தர்க்கம், இலக்கணம், வான இயல், மருத்துவம், சாங்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது.
◆ வட மொழியே இங்கு பயிற்று மொழியாக இருந்தது.
◆ இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
◆ யுவான் சுவாங் இப்பல்கலைக் கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.
◆ அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 3,000 மாணவர்களும் 541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர்.
◆ இப்பல்கலைக்கழக்த்தின் புகழ் பெற்ற ஆசிரியர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர், திங்கநாகர், ஸ்திரமதி, சிலாபத்திரர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.
◆ 2014 , ஆகஸ்ட், 29 – ஆம் நாள் முதல் நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களும் 11 பேராசிரியர்களுடன் முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.
◆ 2016 , ஜுலை, 15 – ஆம் நாள், நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனேஸ்கோ அமைப்பு உலகப்பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது...
0 Comments