பத்தாம் வகுப்பு தமிழ்

இயல் -5 செய்யுள்

கல்வி - மணற்கேணி

செய்யுள் 2. நீதிவெண்பா

கா.ப.செய்குதம்பிப் பாவலர்

பாடல் :

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

 அருப்பதும் ஆவிக்கு அருந்துணையாய்

 இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று


சொற்பொருள்

அருளைப் பெருக்கி

அறிவைத் திருத்தி

மருளை அகற்றி

மதிக்கும் தெருளை அருப்பதும்

ஆலிக்கு உறுதுணையாய்

இன்பம் பொருத்துவதும்

கல்வியென்றே போற்று


பொருளுரை

கருணையை அதிகரிக்கச் செய்து

அறிவைச் சீராக்கி

மயக்கத்தை நீக்கி

போற்றும் அறிவுக்குத் தெளிவைத் தருவதும்

உயிருக்கு உற்றதுணையாய்

மகிழ்ச்சியை சேர்ப்பதும்

கல்வி என்றே போற்றுக.

அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்


விளக்கவுரை

கல்வியைப் போற்ற வேண்டும் அதை எதற்காகப் போற்ற வேண்டும், எவ்வாறு போற்ற வேண்டும் என்று சதாவதானி செய்குதம்பிப் பாவலர் கூறுகிறார்.



1. நீதிவெண்பா யாரால் இயற்றப்பட்டது?


கா.ப.செய்குதம்பிப்பாவலர்


2.செய்குதம்பிப்பாவலர் பிறந்த ஆண்டுஎது?


1874


3. செய்குதம்பிப்பாவலர் பிறந்த ஊர் எது?


இடலாக்குடி, கன்னியாகுமரி மாவட்டம்


4. செய்குதம்பிப் பாவலர் உரை எழுதியநூல் எது?


சீறாப்புராணம்



5.சதாவதானி' என்று பாராட்டுப் பெற்றவர் யார்?

செய்குதம்பிப்பாவலர்.


6. நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி வெல்வதற்கு பெயர்?

 'சதாவதானி' 


7. 1907 மார்ச் 10 ஆம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியின் பெயர் ?

சதாவதானம்


8.சதாவதானம் கலையில் வல்லவர்?

செய்குதம்பிப் பாவலர்


9.செய்குதம்பிப் பாவலர் மறைவு?

1950


10. செய்குதம்பிப் பாவலர் நினைவாக மணிமண்டபம் மற்றும் பள்ளி எங்கே அமைந்துள்ளது ?


கன்னியாகுமரி மாவட்டம்

இடலாக்குடியில்






ஆசிரியர் குறிப்பு


பெயர் : கா.ப.செய்குதம்பிப் பாவலர்


பிறப்பு :1874 இடலாக்குடி, கன்னியாகுமரி மாவட்டம்


சிறப்புகள் :

சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்; 1907 மார்ச் 10 ஆம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' பாராட்டுப் பெற்றார்.


மறைவு :1950













நீதிவெண்பா,

பத்தாம் வகுப்பு தமிழ்,

இயல்.5 ,செய்யுள்பகுதி,

கா.ப.செய்குதம்பிப் பாவலர் ,

நீதிவெண்பா,

பிரைட் ஜூம் தமிழ்,