TNPSC  குரூப்-4 தேர்வு - 2022 பொது வரலாறு வினா விடைகள்!!


ஹரப்பா நாகரிகத்தின் தனித் தன்மை !!

★ புதிய கற்கால மக்கள் வாழ்ந்த மெஹெர்கர் பகுதி எங்கு உள்ளது? 

- பாகிஸ்தான் (பலுச்சிஸ்தான் மாநிலம்)


★மெஹெர்கர் பகுதி எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?

 - போலன்


★ சிந்துவெளி நாகரிகத்தின் தெருக்கள் ------------- வடிவமைப்பை கொண்டிருந்தது.

 - சட்டக வடிவம்


★ செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

 - ராகிகர்கி


★  மொஹஞ்சதாரோவில் இருந்த கூட்ட அரங்கு ------------- தூண்கள் ------------- வரிசைகளைக் கொண்டது. 

- 20 தூண்கள், 4 வரிசைகள்


★ அரசன் நாரம்சின் என்பவர் சிந்துவெளியிலுள்ள எந்த பகுதியிலிருந்து அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியுள்ளார்? 

- மெலுக்கா


★லோத்தல் என்னும் இடம் ------------- மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 

- குஜராத்


★ குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் ------------- மி.மீ. வரை சிறிய அளவீடுகளை கொண்டுள்ளது.

 - 1704 மி.மீ.

★ மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது?

 - செம்பு

★ வெண்கலத்தால் ஆன ‘நடன மாது’ என்ற சிறிய பெண்சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

 - மொஹெஞ்சதாரோவில்

★ ஒரு பொருளின் வயதை அறியும் முறையான கதிரியக்க கார்பன் முறைக்கு பயன்படும் ஐசோடோப்பு எது? 

- கார்பன்14