பொது அறிவு - பொது அறிவியல் வினா விடைகள்
👉 பூச்சிகளில் -------------- சமச்சீர் அமைப்பு காணப்படுகிறது. - இருபக்க சமச்சீர்
👉 ஜூலை 2017-ல் தமிழகத்தில் எந்தப் பகுதியில், நன்னீரில் வாழக்கூடிய புதிய வகை ஜெல்லி மீன் கண்டறியப்பட்டுள்ளது? - கொடைக்கானல்
👉 பரிணாமத் தொடர்புகளை கிளாடோகிராம் என்னும் மர வரைபடத்தின் மூலம் விளக்குவதை அறிமுகப்படுத்தியவர் யார்? - எர்னஸ்ட் ஹெக்கல்
👉 எந்த அறிவியல் அறிஞர் தன்னுடைய நூலான விலங்குகளின் வரலாறு என்னும் நூலில் விலங்குகளை வகைபடுத்தியுள்ளார்? - அரிஸ்டாட்டில்
👉 பாரம்பரிய வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - அரிஸ்டாட்டில்
👉 குழல் அமைப்புடைய பாசி வகை எது? - வவுச்சீரியா
👉 ஒரு செல் அமைப்புடைய நகரும் தன்மையற்ற பாசி வகை எது? - குளோரெல்லா
👉 லைக்கன்களில் இருந்து பெறப்படும் ----------- அமிலம் உயிர் எதிர்ப்பொருள் தன்மையைப் பெற்றுள்ளது. - அஸ்னிக் அமிலம்
👉 தோலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை எது? - டெர்மோபைட்கள்
👉 நெல்லில் கருகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? - மாக்னபோர்தே கிரைசியே
👉 புற்றுநோயைத் தூண்டும் 'அப்ளாடாக்சின்' நச்சுப்பொருளை உண்டாக்குவது - அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ்
👉 கோஜிக் அமிலம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பூஞ்சை எது? - ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே
👉 நு.து.பட்லர் எந்த ஆண்டு இந்திய தாவர நோய்களைத் தொகுத்து 'பூஞ்சை மற்றும் தாவர நோய்கள்" என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டார்? - 1918
👉 எந்த மாநிலத்தில் உள்ள பூசா என்ற இடத்தில், நு.து.பட்லர் இம்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்? - பீகார்
👉 தாவரங்களில் நுனிகழலை நோய் ----------------- என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. - அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ்
0 Comments