கீரைகளும் அதன் பயன்களும்..!

Kiraikalum atan paya nkalum..!

Bright Zoom Tamil,

கீரைகளும் அதன் பயன்களும்   Bright Zoom Tamil,

கீரைகளும் அதன் பயன்களும் ..!

அகத்திக்கீரை :

ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை :

சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை:

சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை :

தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை :

வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை :

கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை: பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை:

ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை :

சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை:

வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை :

பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை:

உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை:

ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை: ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை :

நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை :

மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை:

கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை:

சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை:

ரத்தத்தை சுத்தம் செய்யும், உணவு செரிமானப் பிரச்சனையை நீக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை:

நஞ்சை முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை :

நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை :

பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை :

கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை:

வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை:

வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை :

பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை:

தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை:

மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை:

இருமலை போக்கும்.

சாணக்கீரை :

காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை :

தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை :

பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை :

பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை :

வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை :

வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை:

மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை :

சளியை அகற்றும்.

நருதாளிகீரை :

ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.