ரத்தத்தை இன்னொருவருக்கு ஏற்றும் பொழுது அதன் வகையை அறிதல் ஏன்?

பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்...!!


ஒருவரின் இரத்தத்தினை இன்னொருவருக்கு ஏற்றும் பொழுது இரத்தத்தின் வகையை அறிதல் ஏன்?

★ மனிதரில் உள்ள குருதி நான்கு இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  A, B, AB, O, என்பனவே அவையாகும்.

★  ஒரு இனக் குருதி உள்ளவருக்கு அதே இனக் குருதியை தான் செலுத்த முடியும்.

★  AB,இனக் குருதியை உடையவருக்கு எந்த வகைக் குருதியையும் செலுத்த முடியும். இவர் பொது வாங்கி எனப்படுவார். ஆனால், இவரின் குருதியை AB, இனக் குருதியை உடையவருக்கு மட்டுமே வழங்க முடியும்.

★ O இனக் குருதியை உடையவரின் குருதியை எல்லா இனக் குருதி உடையவர்களுக்கும் செலுத்த முடியும். இவர் பொது வழங்கி எனப்படுவார். ஆனால், இவருக்கு O இனக் குருதியை மட்டுமே செலுத்த முடியும்.

★ குருதி இனம் மட்டுமன்றி குருதி வகையும் கவனிக்கப்பட வேண்டும். Rh Nee, Rh எதிர் என இரு வகைக் குருதியுண்டு. முதல் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது இவ்வகையைக் கவனிக்காது விடலாம்.

★ ஆனால், இரண்டாம் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது அல்லது கர்ப்பமுற்றோர், பிள்ளை பெற்ற பெண்கள் போன்றவர்களுக்கு முதல் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது இவ்வகைகளை கவனிக்க வேண்டும்.


சந்திரனைச் சுற்றி சில வேளைகளில் வளையமாக தெரிதல் ஏன்?


★ சந்திரனைச் சுற்றி சில வேளைகளில் பெரிய வளையமாக தோன்றுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? காற்றில் அதிக உயரத்தில் உள்ள நீர் சிறிய பனிக்கட்டி துண்டுகளாக உண்டாகியிருக்கும். சந்திரனில் இருந்து வரும் கதிர்கள் இந்தப் பனிக்கட்டியின் வழியாக வரும் பொழுது ஒளி முறிவடைவதால் சந்திரனுக்கு தூரத்தில் இருந்து வருவதாக தோன்றும்.

★  இதுவே ஒரு பெரிய வட்டமாக தோன்றும். சில வேளைகளில் இவ்வட்டம் சிறியதாகவும், சில வேளைகளில் பெரியதாகவும் தோன்றும். பனிக்கட்டி துணிக்கைகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து வட்ட அளவு வேறுபடும். சில வேளைகளில் சூரியனைச் சுற்றியும் இவ்வாறு வளையமாக தோன்றுவதுண்டு.