TNPSC பொதுத்தமிழ்
நாலடியார் பற்றிய வினா விடை
“நான்மணிக்கடிகை”
மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்
தனக்குச் தகைசால் புதல்வர் -மனக்கினிய
காதல் புதல்வருக்கு கல்வியே -கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு”
- விளம்பிநாகனார்.
சொல் பொருள்:
மடவாள் – பெண்
தகைசால் – பண்பில் சிறந்த
மனக்கினிய – மனதுக்கு இனிய
காதல் புதல்வர் – அன்பு மக்கள்
ஓதின் – எதுவென்று சொல்லும்போது
புகழ்சால் – புகழைத் தரும்
உணர்வு – நல்லெண்ணம்
1. நான்மணிகள் எனும் தொடரால் குறிப்பிடப்படும் நூல் நான்மணிக்கடிகை ஆகும்.
2. அறிவார் யார் நல்லாள் பிறக்கும் குடி எனும் தொடர் இடம்பெறும் நூல் நான்மணிக்கடிகை.
3. நான்மணிக்கடிகை பிரித்து எழுதுக
“நான்கு + மணி + கடிகை”
4. நான்மணிக் கடிகை நூல் ஒரு
“பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூலாகும்”
5. நான்மணிக்கடிகை பெயர் வரக் காரணம்
“நான்கு வகை மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையை ஆகையால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது”
ஒவ்வொரு பாடலிலும் ஒத்த நான்கு சிறந்த கருத்துக்கள் சேர்ந்து இணைந்து கூறப்படுவதால்“நான்மணிக்கடிகை எனப்பயர் பெற்றது”
6. நான்மணிக்கடிகை பாடலாசிரியர்
“விளம்பிநாகனார்”
7. நான்மணிக்கடிகை அடிவரையரை
“நான்கு (4) அடிகள் கொண்டது”
8. நான்மணிக்கடிகை பாவகை
“வெண்பா பாக்கள்”
9. நான்மணிக்கடிகை பாடல்களின் எண்ணிக்கை
” கடவுள் வாழ்த்து(1) ,103 வெண்பாக்கள் உடன் சேர்த்து மொத்தம் (104) பாடல்கள் கொண்டது”
10. நான்மணிக்கடிகையில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள்
“திருமால்”
11. நான்மணிக் கடிகையில் இடம்பெறும் இரண்டு பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்
“ஜி யு போப்”
12. நான்மணிக்கடிகை இயற்றப்பட்ட ஆண்டு
“கிபி நான்காம் நூற்றாண்டு”
13. நான்மணிக்கடிகை இயற்றிய விளம்பிநாகனார் பிறந்த ஊர்
“விளம்பி”
14. நான்மணிக் கடிகையின் வேறு பெயர்
“வைணவ இலக்கியம்”
15. விளம்பிநாகனார் சமயத்தைச் சார்ந்தவர்
“கடவுள் வாழ்த்து பாடல் இரண்டும் திருமாலைப் பற்றி உள்ளதால் இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் ஆவார்”
16. விளம்பிநாகனார் ஐ பற்றி நூல் குறிப்பு
“இவர் பெயர் நாகனார் இவர் பிறந்த ஊர் விளம்பி ஆகையால் இவரை விளம்பிநாகனார் என்று அழைக்கப்பட்டார்கள்.
விளம்பி நாகனார் சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்றும் கூறுவர்.
இவர் கிபி நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்.
17. நான்மணிக்கடிகையில் இடம்பெறும் சிறப்பு தொடர்கள்
“இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமில்லா போல்தத்து வள்ளன்மை குற்றம்”
“நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி தாமரை
பெண்ணுக்கு அணி நாணம்”
18. கடிகை என்பதன் பொருள்
“அணிகலன்”
நாலடியார் பற்றிய வினா விடை
19. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல்
“நாலடியார்”
20. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல்
“நாலடியார்”
21. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல்
“நாலடியார்”
22. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல்
“நாலடியார்”
23. முப்பெரும் நூல்கள் யாவை
“திருக்குறள்”
“நாலடியார்”
“பழமொழி நானூறு”
24. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல்
“நாலடியார்”
25. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல்
“நாலடியார்”
26. நாலடியார் பிரித்து எழுதுக
“நாலடி + ஆர்”
27. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது
“நாலடியார்”
28. நாலடியார் என பெயர் வரக் காரணம்
“நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது”
29. நாலடியார் பாடலைப் பாடியவர்கள்
“சமணமுனிவர்கள் பலரால்”
30. நாலடியார் அடி எல்லை
“4 அடிகள்”
31. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள்
“அறம் – பொருள் – இன்பம்”
32. நாலடியாரின் பாவகை
“வெண்பா”
33. நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை
“400 பாடல்கள்”(கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 401 பாடல்கள்)
34. நாலடியாரை தொகுத்தவர்
“பதுமனார்”
35. நாலடியாரின் வேறு பெயர்கள் யாது
“நாலடி”
“நாலடி நானூறு”
“வேளாண் வேதம்”
“திருக்குறளின் விளக்கம்”
36. நாலடியார் பாடலின் அருமை பெருமைகளைக் கூறும் ஆன்றோர் மொழிகள்
“பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி
வேலும் வாளும் அடலுக்கு உறுதி
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
“பழகு தமிழ் சொல்லருமை
நாலிரண்டில்”
“நாலடி இரண்டடி கற்றவ னிடத்து
வாயடி கையடி அடிக்காதே”
37. இப்பாடலில் நால் எனப்படுவது“நாலடியார் எனவும்”இரண்டு எனப்படுவது “திருக்குறள் எனவும் பொருள்படும்”
38. நாலடியாரில் குறிப்பிடப்படும் அறம், பொருள், இன்பம் அதிகாரங்கள்
“அறம் – 13 அதிகாரங்கள்”
“பொருள் – 24 அதிகாரங்கள்”
“இன்பம் – 3 அதிகாரங்கள்”
39. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
“ஜி யு போப்”
40. நாலடியார் உணர்த்தும் செயல்
“நன்மை செய்வோர் வாய்க்கால் போன்றோர்”
41. நாலடியாரில் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகள்
“கல்வியழகே அழகு”
“கல்விகரையில கற்பவர் நாள் சில”
“நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு துரையுண்டு”
“செல்வம் சகடக்கால் போல வரும்”
0 Comments