TNPSC தேர்வு  2022 - குடி ஆட்சி பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!

TNPSC Exam 2022 - General Knowledge Quizzes on Drinking Governance

Bright Zoom Tamil

Bright Zoom Tamil


01. உயர்குடி ஆட்சி நடைபெறும் நாடுகள்? - இங்கிலாந்து, ஸ்பெயின்


02. ஒரு நபரால் (வழக்கமாக அரசர்) அமைக்கப்படும் அரசாங்கமே ----------- எனப்படும். 

- முடியாட்சி


03. முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

- தனிநபர் ஆட்சி 


04. பொ.ஆ.மு.500ஆம் ஆண்டு முதன் முதலில் "குடியரசு" (Republic) எனும் சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?

 - ரோம்

05. மக்களாட்சி (Democracy) எனும் சொல் சொற்களிலிருந்து DEMOS மற்றும் CRATIA எனும் பெறப்பட்டதாகும். 

-கிரேக்கம்


06. மக்களாட்சியின் வகைகள்?

 - நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி (பிரதிநிதித்துவ மக்களாட்சி)


07. நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடு எது?

 - இந்தியா


08. இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு ஆகிய முக்கிய கொள்கையின் அடிப்படையில் இயங்கும் நாடு எது?

 - இந்தியா


09. புது தில்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை வடிவமைத்த பிரிட்டிஷ் கட்டிடக்கலைஞர்கள் யார்?

 - எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்


10. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் ----------------------- ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல்கள் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

- ஐந்து