TNPSC -பொது அறிவு - 2022.!

புவியியல் தகவல்கள்..!!

நாம் வாழும் பூமி பற்றிய தகவல்கள்..!

Bright Zoom Tamil,


நாம் வாழும் பூமி பற்றிய தகவல்கள்..!

♦ உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல்.

♦ தமிழகத்தின் கிழக்கே உள்ள பகுதியை வங்காள விரிகுடா எனவும், கேரளத்தின் மேற்கே உள்ள கடல் பகுதியை அரபிக்கடல் எனவும் கூறுகிறோம். 


1. உலகின் ஆழமான பெருங்கடல் எது?

 - பசிபிக் பெருங்கடல்


2. உலகின் மிக ஆழமான அகழி எது? அது எங்குள்ளது? 

- மரியானா அகழி, பசிபிக் பெருங்கடல்


3. மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதிக்கு .................. என்று பெயர். 

- தீபகற்பம்


4. நம் இந்தியா ஒரு ............ 

- தீபகற்ப நாடு


5. இரண்டு நிலப்பரப்புகளை பிரிக்கும் குறுகிய நீர;ப்பகுதிக்கு ................ என்று பெயர் - நீர்ச்சந்தி


6. இந்தியா, இலங்கை இரண்டுக்கும் இடையில் உள்ள நீர்ச்சந்தி எது?

 - பாக் நீர்ச்சந்தி


7. விரிகுடா என்பது என்ன?

 - மூன்று பக்கங்களும் நிலமாகவும், ஒரு பக்கம் கடலாகவும் அமைந்த நீர;ப் பரப்புக்கு விரிகுடா (Bay) என்று பெயர்


8. நிலச்சந்தி என்பது என்ன?

 - விரிந்த இரண்டு நீர;ப்பரப்புகளைப் பிரிக்கும் மிகக் குறுகிய நிலப்பரப்பை நிலச்சந்தி (Isthmus) என அழைப்பர்


9. தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவை இணைப்பது ..............

 - பனாமா நிலச்சந்தி


10. பூமியின் மையக்கருவிற்குமேல் ............. என்ற அடுக்கு உள்ளது.

 - மென் இடைமண்டலம் (mantal)


11. பூமியின் மிக மெல்லிய மேல் அடுக்கு ............... எனப்படுகிறது.

 - பூமி ஓடு (Crust)


12. உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடல் எது?

 - இந்தியப் பெருங்கடல்


13. கடலில் உள்ள மீன்களுக்கு பெருமளவில் உணவாகப் பயன்படும் உயிரி? 

- பிளாங்டன்


14. உலகின் மிகப்பெரிய பவளப்பாறை 'கிரேட் பாரியர் ரீப்" காணப்படும் கடற்கரை? 

- ஆஸ்திரேலியா கடற்கரை


15. பூமியின் மையப்பகுதியில் வெப்பத்தின் அளவு 

- சுமார; 6000 டிகிரி செல்சியஸ்