TNPSC- 2022!!!

பொது அறிவு வரலாறு 

மொகலாய மன்னன் ஜஹாங்கீர்...!!

Bright Zoom Tamil,



மொகலாய மன்னன் ஜஹாங்கீர் பற்றிய குறிப்புகள்..!

💥 அக்பரின் அவையிலிருந்து நூலாசிரியர்கள் யார்? 

- அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் இ கான்


💥 அக்பரின் அவையின் சிறந்த கதை ஆசிரியர் யார்?

- பீர்பால்


💥 அக்பரின் அவையை அலங்கரித்த இசை மேதை மற்றும் ஓவியர் யார்? 

- தான்சென் மற்றும் தஷ்வன்



💥 துருக்கிய பாரசீகத் தலைவரான பாபர்.


💥 'முகல்' என்பது பாரசீகச் சொல் ஆகும். இதன் பொருள் 'மங்கோலியர்'. இப்பேரரசை 'தைமூர் பேரரசு' என்றும், 'இந்துஸ்தான்' என்றும் அழைத்துள்ளனர். 


💥 ஜஹங்கீர் யாருடைய மகன்? 

- அக்பர்


💥 ஜஹங்கீரின் ஆட்சிக்காலம்? 

- 1605 முதல் 1627 வரை


💥 ஜஹஹ்ங்கீரின் இயற்பெயர்?

- சலீம் நூருதீன் முகமது ஜஹங்கீர்


💥 ஜஹஹங்கீர் என்பதன் பொருள்? 

- உலகத்தைக் கைப்பற்றியவர்


💥 ஜஹாங்கீர் என்றால் பெர்சிய மொழியில் “உலகத்தின் வெற்றியாளர்” என்று பொருள்.


💥 1615 ஆம் ஆண்டில் சர்தாமஸ் ரோ சூரத் நகரில் வணிகம் செய்வதற்கு அனுமதி அளித்தார்.


💥 இவரது சுயசரிதை “துசுக்-இ-ஜஹாங்கிரி” அல்லது “ஜஹாங்கீர்நாமா” என்று அழைக்கப்பட்டது.


💥 டெல்லியை ஆட்சி புரிந்த கடைசி சுல்தானான இப்ராஹிம் லோடியை தோற்கடித்து முகலாய அரசை தோற்றுவித்தவர்.


💥 இப்பேரரசை ஒவ்வொருவரின் வாரிசும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அவ்வாறு ஆட்சி புரிந்ததில் நான்காவது பேரரசராக ஆட்சி செய்த அரசர் ஜஹாங்கீர்.


💥 ஜஹாங்கீர், பாபரின் பேரரான அக்பருக்கும், ஜோதாபாய்க்கும் பிறந்த  மகனாவார். இவர் 1569ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பிறந்தார். 


💥 இவரின் முழுப்பெயர் நூருத்தீன் சலீம் ஜஹாங்கீர். ஜஹாங்கீர் என்றால் பெர்சிய மொழியில் “உலகத்தின் வெற்றியாளர்” என்று பொருள்.


💥 அக்பருக்கு பிறந்த மகன்களில் உயிருடன் இருந்த மூத்த மகனாவார். 


💥 இவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்கள் மன்பாவதீ பாய், இளவரசி மன்மதி மற்றும் நூர்ஜஹான் ஆவார்.


💥 1605ஆம் ஆண்டு அரியணை ஏறினார் ஜஹாங்கீர். 


💥 ஒரு சில மாதங்களில் இவரின் மூத்த மகனான குஸ்ரூ தன் தந்தைக்கு எதிராக கிளர்ச்சியின் ஈடுபட்டார். 


💥 குஸ்ரூக்கு 5ஆம் சீக்கிய குரு அர்ஜூன்தேவ் ஆதரவு அளித்தார். இதனை அறிந்தவுடன், குஸ்ரூவின் கண்கள் பறிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.


💥 5ஆம் சீக்கிய குருவும் கொல்லப்பட்டார். இவரின் ஆட்சியில் தான் வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ ஆங்கில வணிகக்குழு சார்பாக வருகை தந்தனர்.


💥 1615ஆம் ஆண்டில் சர்தாமஸ் ரோ சூரத் நகரில் வணிகம் செய்வதற்கு அனுமதி பெற்றார். 


இவரது சுயசரிதை “துசுக்-இ-ஜஹாங்கிரி” அல்லது “ஜஹாங்கீர்நாமா” என்று அழைக்கப்பட்டது. 


💥 இவர் நீதித்துறையில் ’நீதிச் சங்கிலி மணி’ என்ற முறையை உருவாக்கினார். இந்த மணியானது ‘ஷபர்ஜ்’ அரண்மனையில் இருந்து யமுனை ஆற்றங்கரை வரை கட்டப்பட்டது. 


💥 ஷெர் ஆப்கன், மெகருன்னிஷா என்பவரை மணந்திருப்பார். இவர் மிர்சா கியாஸ் பெக்கின் என்பவரின் மகளாவார். ஷெர் ஆப்கன் மறைவிற்கு பிறகு மெகருன்னிஷாவை ஜஹாங்கீர் ஏற்றுக்கொண்டு 1611ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். 


💥  திருமணத்திற்கு பிறகு இவர் பெயர் ’நூர்ஜஹான்’ என்று மாற்றப்பட்டது. 


💥 நூர்ஜஹான் என்றால் ‘உலகின் ஒலி’ என்று பொருள். இதற்கு முன்பு ’நூர்மஹால்’ (அரண்மனையின் ஒலி) என்று அழைக்கப்பட்டார். இவர்களிடம் அதிகாரம் முழுவதும் கொடுக்கப்பட்டது. 


💥 இவர் 1645ஆம் ஆண்டில் காலமானார். 1611 – 1626ஆம் ஆண்டு வரை நூர்ஜஹானின் காலம் என்று வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.


💥 ஜஹாங்கீர், ஸ்ரீநகரில் ’ஷாலிமர் மற்றும் நிஷாத்’ என்ற பூந்தோட்டத்தை உருவாக்கினார். மேலும் சிக்கந்தராவில் தன் தந்தையான அக்பரின் கல்லறையை கட்டினார்.


💥 ஆக்ராவில் நூர்ஜஹானின் தந்தைக்கு இதி-மத்-தௌலா என்று கல்லறை எழுப்பினார்.


💥  லாகூரில் பெரிய மசூதி ஒன்றையும் கட்டியுள்ளார். 


💥 இவரின் உடல்நிலை அதிகமான மதுப்பழக்கத்தால் சீரிழந்தது. இதனால் 1627ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். 


💥 இவரின் உடல் பஞ்சாப்பில் உள்ள ஷாதராவில் புதைக்கப்பட்டது. அவ்விடத்தில் சமாதி ஒன்றும் இவரின் மகனான ஷாஜஹானால் எழுப்பப்பட்டுள்ளது.


💥 ஜஹங்கீருக்கு எதிராக அரியணையைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு கலகம் விளைவித்த அவருடைய மகன் யார்?

- குஷ்ரு


💥 ஜஹங்கீரின் மகன் குஷ்ருவுக்கு உதவிய சீக்கியத் தலைவர் யார்? 

- குரு அர்ஜூன் சிங்


💥 ஜஹங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதி யார்? 

- தாமஸ்ரோ


💥 ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் எங்கு நிறுவப்பட்டது? 

- சூரத்