TNPSC - பொது அறிவு - 2022..!!!

புவியியல் - சூரியக் குடும்பம்

தொலைநோக்கிகள் வழியே ஆராய்ந்தால் யுரேனஸ், நெப்டியூன், ஆகிய கோள்களையும், குறுங்கோள்களையும், குள்ளக்கோள்களையும், வால்நட்சத்திரங்களையும், பல ஆயிரக்கணக்காண விண்மீன்களையும், அண்டங்களையும், வாயுத்திரள்களையும் காணலாம்.

சூரியக் குடும்பத்தில் மொத்தம் எட்டுக் கோள்கள் உள்ளன. எல்லாக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியும் ஒரு கோள்தான். பூமியின் வளிமண்டலத்தில் உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருப்பதால், பற்பல உயிர்களும், நாமும் வாழ முடிகிறது.


1. சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும் மாலையில் மறைந்தபின்பும் புலப்படும் கோள்கள்

 - புதன், வெள்ளி


2. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும் ............. 

- திடக்கோள்கள்


3. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ..............

 - வாயுக்கோள்கள்


4. மிகப்பெரிய மிக வெப்பமான வாயுப்பந்து .............

 - சூரியன்


5. சூரியன் பூமியிலிருந்து ................ தொலைவில் உள்ளது. 

- சுமார் 15 கோடி கி.மீ.


6. தானே ஒளிரும் ஒரே வான்பொருள்

 - சூரியன்


7. எந்த கோள்களுக்கு வளையம் போன்ற அமைப்பு காணப்படுகிறது?

 - சனி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன்


8. குள்ளக் கோள்கள் 

- புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே


9. எந்தக் கோள்களுக்கிடையே இலட்சக் கணக்கான குறுங்கோள்கள் காணப்படுகின்றன.

 - செவ்வாய் மற்றும் வியாழன்


10. தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றும் கோள்கள் 

- வெள்ளி மற்றும் யுரேனஸ்


11. பூமியின் ஒரே துணைக்கோள்

 - சந்திரன்


12. சந்திரன் பூமியைச் சுற்றிவர ஏறத்தாழ எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறது. 

- 27.3 நாட்கள்


13. சந்திரன் எத்தகைய வடிவம் கொண்டது? 

- கோள வடிவம்


14. முதன் முதலில் சந்திரனின் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்து அனுப்பிய செயற்கைக்கோள் எது?

 - லூனா 3 


15. பூமியில் உள்ளதுபோல மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் எனப் பல நிலத்தோற்றங்கள் எதில் உள்ளன?

 - சந்திரன்


TNPSC பொது அறிவு - 2022

புவியியல் - சூரியக்குடும்பம் 

★ சூரியக் குடும்பம் என்பது சு+ரியன், எட்டுக் கோள்கள், கோள்களைச் சுற்றி வரும் சந்திரன் போன்ற துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், இலட்சக் கணக்கான குறுங்கோள்கள், வால்நட்சத்திரங்கள் ஆகியன அனைத்தும் அடங்கியதாகும்.


16. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் அமைந்தால் நிகழ்வது ................ 

- அமாவாசை


17. சூரியனிடமிருந்து .................. ஆவது கோளாக பூமி அமைந்துள்ளது.

 - 3


18.  மிகுந்த வெப்பம் கொண்ட கோள்கள் எவை?

 - வெள்ளி, புதன்


19. அமாவாசையன்று சந்திரன் எங்கே போகிறது? 

- சந்திரன் சூரியனுக்கு எதிர்த்திசையில் அமைவதால், இருள் சு+ழ்ந்து காணப்படுகிறது. ஆகையால் சந்திரன் தெரிவதில்லை.


20. பால்வெளி அண்டத்தில் ஓர் அங்கமாகச் செயல்படுவது? 

- சூரியக் குடும்பம்


21. பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதி 

- அண்டம்


22. பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறைகளால் ஆனது .............. 

- வால்நட்சத்திரம் 


23. வால்நட்சத்திரத்தின் வால்ப்பகுதி சு+ரியனுக்கு எந்த திசையில் அமையும். - எதிர்


24. பூமியின் விட்டத்தில் சுமார் கால்பங்கு அளவு மட்டுமே உள்ள கோளம் 

- சந்திரன்


25. துணைக்கோள்களே இல்லாத கோள்கள் எவை?

 - புதன் மற்றும் வெள்ளி


26. வியாழன் கோளுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன? 

- 63


27. செவ்வாய் கோளுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன? 

- 2


28. சனி கோளுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன? 

- 60


29. யுரேனஸ் கோளுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன? 

- 27


39. நெப்டியூன் கோளுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன? 

- 13