TNPSC -பொது அறிவு - 2022
புவியியல்
நாம் வாழும் பூமி..!
Bright Zoom Tamil,
புவியியல் நாம் வாழும் பூமி..!
♦ மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் ஆகியவை பூமியின் முக்கிய நில அமைப்புகள் ஆகும்.
♦ சுற்றியுள்ள நிலப்பகுதிகளைவிடச் சற்றே உயரமாகவும் அதன் மேற்பகுதி தட்டையாகவும் உள்ள நில அமைப்பு பீடபூமி எனப்படுகிறது.
♦ திபெத் பீடபூமிதான் உலகின் மிக உயரமான பீடபூமி ஆகும்.
1. உலகின் மிக உயரமான மலைத்தொடர் எது?
- இமயமலைத் தொடர்
2. உலகின் முக்கிய சமவெளிகளில் ஒன்று ..................
- கங்கை ஆறு பாயும் வட இந்தியப் பகுதி
3. கடல்கள் இன்றித் தொடர்ச்சியான அகண்ட நிலப்பரப்புகள் ............... எனப்படுகின்றன.
- கண்டங்கள்
4. உலகில் உள்ள ஏழு கண்டங்களில் மிகப்பெரியது எது?
- ஆசியா
5. உலகில் மிக நீளமான நதி எது?
- நைல் நதி (6695 கி.மீ)
6. ராக்கி மலைத்தொடர் எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?
- வட அமெரிக்கா
7. உலகின் நீளமான மலைத்தொடர் எது?
- ஆண்டிஸ் மலைத்தொடர்
8. உலகின் மிகப்பெரிய ஆறு எது?
- அமேசான் (6586 கி.மீ நீளம்)
9. ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
- ஐரோப்பா
10. ஆஸ்திரேலியா கண்டம் ஒரு .............
- தீவுக் கண்டம்
11. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப் பாறை எது?
- கிரேட் பாரியர் ரீப்
12. பிஜித் தீவுகள், பாப்புவா, நியூகினியா போன்ற தீவுகள், பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- ஒசியானியத் தீவுகள்
13. நம் நாடு 'மைத்ரேயி" எனும் ஆய்வுக் குடியிருப்புகளை எங்கு நிறுவியுள்ளது?
- அண்டார்டிகா
14. நம் நாடு சமீபத்தில் அண்டார்டிகாவில் ................ என்னும் புதிய ஆய்வு குடியிருப்பை நிறுவியுள்ளது?
- பாரதி
15. பூமியின் மேற்பரப்பில் சுமார் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
- 71
0 Comments