TNPSC - பொது அறிவு - புவியியல் -2022.!!!

சுழன்றும் சுற்றியும் வரும் பூமி..!

The earth revolves around 

Bright Zoom Tamil,


சுழன்றும் சுற்றியும் வரும் பூமி

பூமி எப்போதும் பற்பல இயக்கங்கள், நகர்வுகளைக் கொண்டது. இவற்றுள் தற்சுழற்சி மற்றும் சூரியனைச் சுற்றி வருதல் ஆகிய இரு இயக்கங்கள் முக்கியமானவை. சுமார் 23 மணி 56 நிமிடத்திற்கு ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றி வருகிறது. அதையே பூமியின் தற்சுழற்சி என்கிறோம். இதன் காரணமாகத்தான் பகல் இரவு மாற்றம் ஏற்படுகிறது.


1. பூமி தன்னைத்தானே சுற்றிவர ஆகும் காலம் எவ்வளவு?

 - சுமார் 23 மணி 56 நிமிடம்


2. பூமியின் தற்சுழற்சியால் ஏற்படுவது .............

 - பகல் இரவு மாற்றம்


3. பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்று அறிவியல் வழியில் விளக்கிக் கூறியவர் யார்? 

- ஆரியபட்டர்


4. ஆரியபட்டர் என்பவர் 

- பண்டைய இந்திய வானவியல் அறிஞர்


5. பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை

 - நீள்வட்டம்


6. பூமியில் பருவகால மாற்றம் ஏன் ஏற்படுகிறது? 

- பூமியின் அச்சு சாய்வாக இருப்பதால், பருவகால மாற்றம் ஏற்படுகிறது.


7. சம இரவு பகல் நாட்கள் என்று அழைக்கப்படுவது 

- மார்ச் மற்றும் செப்டம்பர் 23


8. வசந்தகால சம இரவு பகல் நாளென்று, எந்த நாளை அழைக்கிறோம்?

 - மார்ச் 21


9. இலையுதிர்கால சம இரவு பகல் நாளென்று, எந்த நாளை அழைக்கிறோம்?

 - செப்டம்பர் 23


10. தமிழ் மரபின்படி பருவ காலங்கள் எத்தனை? அவை யாவை? 

- ஆறு. அவை 

★இளவேனில், 

★ முதுவேனில், 

★கார் (மழை), 

★ குளிர், 

★ முன்பனி, 

★ பின்பனி


11. பூமியின் அச்சு ................. டிகிரி சாய்ந்துள்ளது.

 - 23(1/2)


12. பொதுவாக எந்த மாதத்தில் பூமி சூரியனுக்கு வெகுதொலைவில் இருக்கும்?

 - ஜூலை


13. பொதுவாக எந்த மாதத்தில் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்?

 - ஜனவரி


14. வட ஓட்டம் என்பதை எவ்வாறு அழைக்கலாம்?

 - உத்ராயனம்


15. தென் ஓட்டம் என்பதை எவ்வாறு அழைக்கலாம்? 

- தட்சிணாயனம்