TNPSC - பொது அறிவு 2022...!

இந்திய பாராளுமன்றம் - (பகுதி- 1)

Bright Zoom Tamil,

இந்திய பாராளுமன்றம் குறித்த பொது அறிவு தகவல்கள்...!

1. இந்திய பாராளுமன்றம்

 - மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது

2. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு

 - பாராளுமன்றம்

3. புதிய மாநிலங்களை உருவாக்கவும், அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு

 - பாராளுமன்றம்

4. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் 

- சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்

5. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் 

- 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

6. மக்களவையின் தலைவர்

 - அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.

7. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை

-  32 விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

8. பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிக் குறிப்பிடும் ஷரத்து 

- ஷரத்து 102

9. இந்திய அரசியலமைப்பின் தந்தை - டாக்டர் அம்பேத்கார்

10. அரசிலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது

 - அடிப்படை உரிமை

11. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது

 - முகவுரை

12. இந்திய அரசாங்க முறையானது - பாராளுமன்ற ஆட்சி முறை

13. மூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகார யார் வசமுள்ளது 

- பாராளுமன்றம்

14. பாராளுமன்றத்தி்ன் மிகப்பழமையான நிதிக்குழு

 - பொதுக் கணக்குக் குழு

15. பாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை 

- 24

16. பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை 

- 45

17. பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை

 - 21

18. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிகக் குறுகிய கூட்டத்தொடர் 

- குளிர்கால கூட்டத்தொடர்

19. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிக நீண்ட கூட்டத்தொடர்

 - பட்ஜெட் கூட்டத்தொடர்

20. பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகபட்சம் 

- 6 மாதங்கள்

21. பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகர் வராத சூழ்நிலையில் தலைவராக பணியாற்றுபவர் 

- துணை சபாநாயகர்

22. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் 

- இந்திராகாந்தி

23. லோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம்

 - 5 ஆண்டுகள்

24. அனைத்து இந்தியப் பணிகளையும் உருவாக்கும் அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை

 - இராஜ்யசபை

25. மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை 

- இராஜ்யசபை

26. பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர்

 - சபாநாயகர்

27. பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும் 

- 2 முறை

28. எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவும், பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்றவர்

 - இந்திய அட்டர்னி ஜெனரல்

29. பாராளுமன்றத்தில் இடம் பெறும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை

 - 14

30. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன 

- மக்கள் தொகை அடிப்படையில்.