TNPSC - பொது அறிவு 2022...!
இந்திய பாராளுமன்றம் - (பகுதி- 2)
Bright Zoom Tamil,
இந்திய பாராளுமன்றம் குறித்த பொது அறிவு தகவல்கள்...!
31. நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம்
- மத்திய அமைச்சரவை
32. காபினெட்டின் தலைவர்
- பிரதமர்
33. மத்திய அமைச்சரவையின் தலைவர்
- பிரதமர்
34. காபினெட் என்பது
- மத்திய அமைச்சரவையின் உள்ளங்கம்
35. மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும்
- 6 மாதங்கள் வரை
36. அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது
- மூன்று
37. அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது
- லோக்சபைக்கு
38. ஒரு லோக் சபை உறுப்பினர் தன் இராஜிநாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்
- சபாநாயகர்
39. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
- லோக்சபை
40. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை
- லோக்சபை(மக்களவை)
41. லோக்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்
- லோக் சபை உறுப்பினர்கள்
42. தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையெனில் ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும்
- 60 நாட்கள் (முன்னறிவிப்பின்றி)
43. பண மசோதா என்று வரையறை செய்பவர்
- சபாநாயகர்
44. பண மசோதா எந்த அவையில் மட்டுமே புகுத்தப்படும்
- லோக்சபை
45. பண மசோதாவைப் பொறுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு
- 14 நாட்கள்
46. லோக்சபையின் பதவிக்காலம்
- 5 ஆண்டுகள்
47. லோக்சபையின் பதவிக்காலம் எந்த சமயத்தின்போது நீட்டிக்கப்படலாம்
- தேசிய அவசரகால நெருக்கடி நிலையின்போது
48. லோக்சபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
- 2 (ஆங்கிலோ இந்தியர்கள்)
49. தற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
- 545 (530+13+2)
50. 545 என்ற எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும்
- 2025
51. லோக்சபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு
- 25
52. லோக்சபை உறுப்பினராவதற்குரிய அதிகபட்ச வயது வரம்பு
- இல்லை.
53. இராஜ்யசபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு
- 30
54. இராஜ்யசபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள்
- லோக்சபை மற்றும் இராஜ்யசபை உறுப்பினர்கள்
55. இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு யூனியன் பிரதேசங்கள்
- தில்லி மற்றும் பாண்டிச்சேரி
56. இராஜ்யசபையின் பதவிக்காலம்
- நிரந்தரமானது
57. இராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம்
- 6 ஆண்டுகள்
58. தற்போது நடைமுறையில் உள்ள இரைஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
- 245 (233+12)
59. மாநில சட்டப்பேரவை கொண்ட இரு யூனியன் பிரதேசங்கள்
- தில்லி மற்றும் பாண்டிச்சேரி
60. ஒரு மசோதாவுக்கு உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை
- 3
61. ஒரு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை
- 3
62. இருசபைக் கூட்டுக் கூட்டத்திற்கு வழி செய்யும் ஷரத்து
- ஷரத்து 108
63. பண மசோதா குறித்து குறிப்பிடும் ஷரத்து
- ஷரத்து 110
64. பட்ஜெட் என்பது - பண மசோதா
65. மதிப்பீட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
- 30
0 Comments