TNPSC - பொது அறிவு 2022...!

இந்திய பாராளுமன்றம் - (பகுதி- 3)

Bright Zoom Tamil,


இந்திய பாராளுமன்றம் குறித்த பொது அறிவு தகவல்கள்...!

66. மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும்

 - லோக்சபையை சார்ந்தவர்கள்.

67. மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம்

 - 1 ஆண்டு

68. பொதுக் கணக்குக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 

- 22 உறுப்பினர்கள்

69. பொதுக் கணக்குக் குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை

 - 15
70. பொதுக் கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை

 - 7

71. இரட்டைச் சகோதரர்கள் என்று கருதப்படும் இரு குழுக்கள்

 - பொதுக் கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு

72. அரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு 

- மதிப்பீட்டுக் குழு

73. மரபின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு 

- பொதுக் கணக்கு குழு

74. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள்

 - 50

75. இந்தியத் தணிக்கை அலுவலரின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழு 

- பொதுக் கணக்குக் குழு


76. பொதுவாக கேள்வி நேரம் என்பது 

- காலை 11 முதல் 12 வரை

77. பூஜ்ய நேரம் என்பது 

- 12 முதல் 1 மணி வரை

78. சபையின் முதல் ஒரு மணி நேரமே

 - கேள்வி நேரம்

79. நம்பிக்கைத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்படும்

 - லோக்சபை

80. லோக்சபையின் தலைவரா செயல்படுபவர்

 - சபாநாயகர்

81. லோக்சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர்

 - சபாநாயகர்

82. லோக்சபையின் பெரும்பான்மை உறுப்பினர் களின் ஆதரவு பெற்ற நபர்

 - பிரதமர்

83. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன 

- மக்கள் தொகை அடிப்படையில்.

84. லோக்சபையின் முதல் சபாநாயகர் 

- ஜி.வி.மாவலங்கார்.

85. ஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது 

86- 1935ம் ஆண்டுச் சட்டம்

86. 195. ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் - ஃபாசல் அலி

87. நியமன உறுப்பினர்களுக்கு இல்லாத ஒரே உரிமை 

- வாக்குரிமை (பாராளுமன்ற செயல்பாடுகளில் வாக்களிக்க இயலாது)

88. காமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

89. அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு 

- ஜப்பான்

90. 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பது

 - 11வது அடிப்படை கடமை

91. ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யும் அரசியலமைப்பு பிரிவு

 - ஷரத்து 356

92. இந்தியாவின் முதல் மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர் 

- இந்திய அட்டர்னி ஜெனரல்

93. இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலரின் ஒய்வுக்கால வயது 

- 65 (அல்லது 6 ஆண்டுகள்)

94. இந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன் 

- இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்.

95. இந்திய பொதுப்பணத்தின் பாதுகாவலன்

 - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலர்.

96. மைய அரசில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர் 

- மொரார்ஜி தேசாய்.

97. இந்திய அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம்

 - மக்கள்

98. இந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்தி்ருக்கிறது 

- கனடா

99. கூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம் 

- அதிகார பங்கீடு

100. இந்தியாவில் நடைமுறையில் உள்ள குடியுரிமை

 - ஒற்றைக் குடியுரிமை