TNPSC பொது அறிவு - 2022..!
பண்டைய துறைமுக நகரம் பூம்புகார் பற்றிய குறிப்புகள்...!
கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர்..!
Bright Zoom Tamil,
துறைமுக நகரம் பூம்புகார்:
★ "பண்டைய தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களுள் பூம்புகாரும் ஒன்று.
★ காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் இந்த ஊரில்தான் பிறந்தார்கள்.
★ பூம்புகார் புகழ்பெற்று விளங்கிய துறைமுக நகரமும் கூட.
★ ஒவ்வொரு நாடும் தனது தேவைக்குப் போக எஞ்சிய பொருள்களை அண்டைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தங்கள் நாடுகளில் பற்றாக்குறையாக உள்ள பொருள்களைப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் வேண்டியிருந்தது.
★ இதற்காகக் கடல்வழி வணிகம் அதிகரித்த போது, துறைமுகங்கள் உருவாகின.
★ அத்தகைய துறைமுகங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுதான் பூம்புகார் துறைமுகம் ஆகும்.
★ இது வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.
★ இது காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறை அருகே உள்ளது.
Keywords :
0 Comments