TNPSC Exam - 2022!!

TNPSC CCSE-4,  Group-2 & 2A Exam - 2022!!

பொருளாதாரம் இந்திய ரிசர்வ் வங்கி!!

உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?


இந்திய ரிசர்வ் வங்கி!!

1. இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை மேற்கொள்கின்ற வங்கி எது? 

- இந்திய ரிசர்வ் வங்கி


2. இந்திய ரிசர்வ் வங்கி செயல்பட தொடங்கிய ஆண்டு? 

- ஏப்ரல் 1, 1935 


3. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு?

 - 1949


4. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் -------------------------- என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934-ல் உருவாக்கப்பட்டுள்ளது. 

- பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும் (The Problem of therupee and its Solution)


5. நாடுகளுக்கு இடையிலான பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

- செலாவணி

6. இந்தியாவின் செலாவணி -------------- என்று அழைக்கப்படுகிறது. 

- ரூபாய்

7. உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது? 

- அமெரிக்க டாலர்


08. ஷெர்ஷா சூரி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 178 கிராம் எடை கொண்ட வெள்ளி நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

 - ருபியா


09. உலோகப் பற்றாக்குறை காரணமாக --------------------- அறிமுகப்படுத்தப்பட்டது. 

- காகிதப்பணம்


10. இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்ட ஆண்டு? 

- 1917 

11. 1656-ல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றிய உலகின் முதல் மைய வங்கி எது?

 - ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி


12. ----------------- பணவியல் கொள்கை மூலம், பண அளிப்பினை மேலாண்மை செய்கிறது. 

- இந்திய ரிசர்வ் வங்கி


13. இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் காகிதப்பணத்தைத் தவிர அனைத்து வகையான காகிதப்பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமை பெற்ற நிறுவனம் எது? 

- இந்திய ரிசர்வ் வங்கி


14. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு? -

 ஜனவரி 1, 1949


15. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு? 

- 1937 


16. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் யார்? 

- ஓஸ்போர்ன் ஸ்மித் (Osborne smith)


17. ------------------- என்பவரால் ₹1க்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது.

 - ஷெர் ஷா சு%2Bரி (Sher shah suri)


18. சமஸ்கிருதச் சொல்லான ரௌப்பியா (Raupya)விலிருந்து ------------------ என்ற வார்த்தை தோன்றியது.

 - ரூபாய்


19. இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கி எது?

 - இந்திய ரிசர்வ் வங்கி


20. வங்கி விகிதக் கொள்கை என்பது -------------------- விகிதக் கொள்கை என்றும் அழைக்கப்படுகிறது. 

- தள்ளுபடி விகிதக் கொள்கை (Discount Rate Policy)