தமிழக வேளாண் பட்ஜெட் 2022-2023 - ஓர் பார்வை!!
Tamil Nadu Agriculture Budget 2022-2023 - An Overview !!
2022-2023-Tamil Nadu Agriculture Budget in tamil
தமிழக வேளாண் பட்ஜெட் (Tamil Nadu Agriculture Budget) :
முக்கிய திட்டங்கள் (Major projects) :
◆ கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையானது டன்னுக்கு ரூ.195 உயர்த்தித் தரப்படும்.
◆ கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவை குறைக்கும் வகையில் வல்லுநர் விதைக்கரும்பு, திசுவளர்ப்பு நாற்றுக்கள், பருசீவல் நாற்றுக்கள், ஒரு பரு விதைக்கரும்பு, உயிர் உரங்கள், கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள், ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும், கரும்பு சோகையை தூளாக்குவதற்கும், ஹைட்ராலிக்டிப்ளர் உள்ளிட்டவை வழங்க ரூ10 கோடி ஒதுக்கீடு
◆ பனை வெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
◆ சிறந்த பனை ஏறும் இயந்திரங்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும்.
◆ கருப்பட்டி உட்பட்ட பனை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கப்படும்.
◆ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
◆ இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.
◆ பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு.
◆ வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு படித்த 200 இளைஞர்கள் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி
◆ சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு விதை முதல் விற்பனைக்கு ரூ.152 கோடியில் உதவி.
◆ மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி ரூ.20 கோடி ஒதுக்கீடு
◆ தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு
◆ மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்கள் சாகுபடியை நான்கு ஆயிரத்து 250 ஏக்கரில் மேற்கொள்ள, ஐந்து கோடியே 37 இலட்சம் ரூபாய் நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
◆ ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி
◆ காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
◆ பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு
◆ தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பூச்சி மற்றும் நோய்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு குறுஞ்செய்தி வாயிலாக விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்படும்.
◆ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தௌpப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்
◆ இதுமட்டுமல்லாமல் மேலும் பல சிறப்பு திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட் 2022-2023ல் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments