செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்..!

Classical Tamil Literatures.!

தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்..!

தொல்காப்பியம், கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பி யங்கள் ஆகியவை சங்க காலத்தில் தோன்றிய செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் ஆகும். இவை சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிய உதவுகின்றன.


தொல்காப்பியம் :

தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் தமிழின் பழமையான இலக்கண நூலாகும். இந்நூலின் முதலிரண்டு பகுதிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுக்கின்றன. மூன்றாவது சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை வரையறுக்கிறது.

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் பதினெண் மேல்கணக்கு நூல்கள், என அழைக்கப்படுகின்றன தமிழில் தோன்றிய இலக்கியங்கள் இவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காலத்தால் பிந்தையவை.


எட்டுத்தொகை நூல்களாவன:

(1) நற்றிணை

(2) குறுந்தொகை

(3) பரிபாடல்

(4) பதிற்றுப்பத்து

(5) ஐங்குறுநூறு

(6) கலித்தொகை

(7) அகநானூறு

(8) புறநானூறு


பத்துப்பாட்டு நூல்களாவன:

(1)திருமுருகாற்றுப்படை

(2) பொருநராற்றுப்படை

(3) பெரும்பாணாற்றுப்படை

(4) சிறுபாணாற்றுப்படை

(5) முல்லைப் பாட்டு

(6) நெடுநல்வாடை 

(7) மதுரைக் காஞ்சி

(8) குறிஞ்சிப் பாட்டு

(9) பட்டினப்பாலை

(10) மலைபடுகடாம்


பதினெண் கீழ்க்கணக்கு:

வாழ்வியல் அறநெறிகளை எடுத்து இயம்புகின்ற பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது  திருவள்ளுவர் குறட்பாக்களைக்  இயற்றிய திருக்குறள் 1330

கொண்ட திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பால்களாகப் பகுக்கப பட்டுள்ளது.


ஐம்பெருங்காப்பியங்கள்

காப்பியங்கள் என்பவை கவிதை நயமுடைய செய்யுள்வடிவிலான நீண்ட இலக்கியப் படைப்புகளாகும். 

அவை;

(1) சிலப்பதிகாரம்

(2) மணிமேகலை

(3) சீவகசிந்தாமணி

(4) வளையாபதி

(5) குண்டலகேசி,