தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்..!

Evidence for learning about the early Tamil community!

Bright Zoom Tamil,

அறிமுகம்:

கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்ப் பண்பாடு தோன்றிவிட்டது. தமிழகத்து வணிகர்களும் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். வெளிநாட்டு வணிகர்கள் கடல்வழியே தமிழகத்திற்கு வந்துபோயினர். வெளிநாட்டினருடன் ஏற்பட்ட தொடர்புகளும், வணிக பண்பாட்டுத் நடவடிக்கைகளும், தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் நகரமயமாதல் உருவானது. தலைநகரங்களும் துறைமுகப்பட்டிணங்களும் தோன்றின. நாணயங்களும் பணமும் புழக்கத்திற்கு வந்தன. 'தமிழ் பிராமி' என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்டது. ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. செம்மொழித் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன.

தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை அறிவியல்பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பல வகையான சான்றுகள்உதவுகின்றன.

அவையாவன:

1. செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்

2. கல்வெட்டுகள்

3. தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள் மற்றும் பண்பாட்டுப் பொருள்கள்

4. தமிழ் அல்லாத மற்றும் அயல்நாட்டினரின் இலக்கியக் குறிப்புகள்.