TNPC போட்டித் தேர்வுகள் - 2022 !!!

பொதுத்தமிழ் - தமிழ்த்தொண்டு 

பெருஞ்சித்திரனார்.

Peruncittiranar in tamil..!

10 th tamil,

★ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

 - துரை.மாணிக்கம் 


★ பெருஞ்சித்திரனார் வாழ்ந்த காலம்? 

- 10.03.1933 - 11.06.1995


★  பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர்? - சமுத்திரம் (சேலம்)


★  பெருஞ்சித்திரனாரின் பெற்றோர் பெயர் என்ன? - துரைசாமி, குஞ்சம்மாள்


★ பாவலரேறு என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் கவிஞர் யார்? - பெருஞ்சித்திரனார்


★  ‘அன்னை மொழியே’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் யார்? - பெருஞ்சித்திரனார்




★  ‘சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்’ என்று பாடியவர் யார்?

 - க.சச்சிதானந்தன்


★ தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?

 - பெருஞ்சித்திரனார்


★ பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?

 - உலகியல் நூறு, கனிச்சாறு, பாவியக்கொத்து, மகபுகுவஞ்சி, நு}றாசிரியம், பள்ளிப்பறவைகள், எண்சுவை எண்பது, கொய்யாக்கனி, ஐயை


★ பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது? 

- திருக்குறள் மெய்ப்பொருளுரை


★ உள்ளத்தில் கனல் மூளச் செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது? 

- வண்டு


★ ‘அன்னை மொழியே’ என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர் யார்?

 - பாண்டியன்


★ ‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல் எது?

 - கனிச்சாறு 


★  ‘முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே’ என்று பாடியவர்? - துரை.மாணிக்கம்


★ ‘நற்கணக்கே’ என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?

 - 18


★  ‘மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!’ எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?

 - மூன்று


★ பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல் எவை? - முன்னைக்கும் முன்னை


★ பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும், தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன?

 - கனிச்சாறு



★  ‘செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல’ பயின்று வரும் அணி எது?

 - உவமையணி


★ செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக?

 - பண்புத்தொகை


★ ‘அன்னை மொழியே’ என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்களை எழுதுக?

 - செந்தமிழே!, மாண்புகழே!, நறுங்கனியே!, எண்தொகையே!, பேரரசே!, நற்கணக்கே!, தென்னன் மகளே!, சிலம்பே!


★ பள்ளிப்பறவைகள் எத்தனை பிரிவாக அமைந்துள்ளது?

 - 3 (குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை)


★ ஏட்டுக் கல்வியறிவுடன் -------------- கல்வியறிவும் தேவை. 

- தொழில்


★ இசையால் --------------- மறைந்து போகும்.

 - துன்பங்கள்