TNPSC பொது அறிவு - 2022..!!!
உயிரியல் - இரத்தச் செல்கள்
1. இரத்தத்தில் எத்தனை சதவீதம் இரத்தச் செல்கள் காணப்படுகின்றன?
- 45%.
2. நோய்க்கிருமிகளிடம் போராடி உடலை பாதுகாப்பது எது?
- வெள்ளையணுக்கள்.
3. மனிதச் சிவப்பணு ............... அற்றது.
- உட்கரு.
4. சிவப்பு நிறமுடைய இருபுறமும் குழியான தட்டுகளை உடைய இரத்தச் செல்கள் எவை?
- சிவப்பணுக்கள் (எரித்திரோசைட்டுகள்).
5. ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் ..................... இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படுகின்றன.
- 5 மில்லியன்.
6. இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் ....................
- 120 நாள்கள்.
7. இரத்த சிவப்பணுக்கள் எங்கு அழிக்கப்படுகின்றன?
- கல்லீரல் மற்றும் மண்ணீரல்.
8. ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் சுமார் .................... வெள்ளையணுக்கள் காணப்படுகின்றன?
- 8000.
9. நிறமற்ற, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மற்றும் உட்கரு உள்ள செல்கள் எவை?
- இரத்த வெள்ளையணுக்கள்.
10. இரத்தத் தட்டுகள் 1 கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 2,00,000 முதல் ................ வரை என்ணிக்கையில் காணப்படுகின்றன.
- 4,00,000.
11. வெள்ளையணுக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- 5. அவை மோனோசைட்டுகள், லிம்ஃப்போசைட்டுகள், நியூட்ரோஃபில்கள்,
12. இரத்தத்தில் மிதக்கும் தட்டு வடிவச் செல்கள் எவை?
- திராம்போசைட்டுகள்.
13. இரத்தத் தட்டுகளில் ............... இல்லை.
- உட்கரு.
14. இரத்தத் தட்டுகளின் வாழ்நாள் எவ்வளவு?
- ஒரு வாரம்.
15. ....................... இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது.
- இரத்தத் தட்டுகள்.
0 Comments