கல்வெட்டுச் சான்றுகள்...!
Inscription evidence in tamil...!

தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்..!

Evidence for learning about the early Tamil community!

Bright Zoom Tamil,

கல்வெட்டியல்:

கல்வெட்டுகளைக் குறித்து படிப்பது 'கல்வெட்டியல்' ஆகும். கல்வெட்டுகள் போலவே செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் போன்றவற்றிலும் தகவல்கள் பொறிக்கப் பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். மொழியின் வரிவடிவம் தோன்றிய காலமே வரலாற்றின் தொடக்க காலம் எனலாம்


தமிழ் பிராமி கல்வெட்டுகள் :

தமிழ்நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கற்பாறைகளிலும் குகைவாழிடங்களிலும் காணப்படுகின்றன. சமணத் துறவிகள் இக்குகைகளைப் பெரும்பாலும் தமது வாழிடங்களாகக் கொண்டிருந்தனர். 

இயற்கையாக அமைந்த மலைக்குகைகளின் விளிம்பில், மழைநீர் வழிந்து வெளியேறுவதற்காகச் சிறிய பகுதியை வெட்டி கொடுங்கை அல்லது வாரி  போன்று செதுக்கியிருந்தனர் அதற்குக்  கீழேதான் பெரும்பாலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

குகைகளின் உட்புறத்தில் படுக்கைகளைப் பாறைகளிலேயே வழுவழுப்பான செதுக்கி உருவாக்கியிருந்தனர். 

குகைகளில் உலகியல் வாழ்வைத் துறந்து, வாழ்ந்த துறவிகளுக்கு அரசர்களும் வணிகர்களும் இயற்கையாக அமைந்த குகைகளை வாழிடங்களாக மாற்றி உதவினர்.


தமிழ்நாட்டில் மாங்குளம், முத்துப்பட்டி, புகலூர், அரச்சலூர், கொங்கர்புளியங்குளம், ஜம்பை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குகைவாழிடங்களில் இன்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளை பெரும்பாலான இடங்களில் காணலாம்  குகை வாழிடங்கள் பண்டைக்கால வணிக வழிகளில் அமைந்துள்ளன.

குறிப்பு:

பண்டைய கல்வெட்டுகள் சிலவற்றில் மக்கள் (உள்ளுர்க்காரர்கள், சுற்றுலாப் பயணிகள்) தங்களுடைய பெயர்களை எழுதியோ செதுக்கியோ அவற்றை பாழ்படுத்தி யுள்ளதை அல்லது நீங்கள் பார்த்து இருக்கலாம் அவ்வாறு பாரம்பரியப் பொதுச் சொத்துக்களை அல்லது மற்றவர்களின் சொத்துக்களை நாசம் செய்வது 'நாசவேலைகள்' என அழைக்கப்டுகிறது .


படம் :

தமிழ் பிராமி கல்வெட்டு காணப்படும் குகைவாழிடத்தில் மழைநீர் வடிவதற்காக செதுக்கிய பள்ளம்

படம் : அரச்சலூரில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டு


படம் : அரச்சலூர் தமிழ் பிராமி கல்வெட்டின் தாள் படி


படம் : பாறைப்படுக்கை, கொ. புளியங்குளம்