TNPSC பொது அறிவு - 2022..!!
உயிரியல்
மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்
பூமியைச் சுற்றிக் காணப்படும் வாயுக்களின் அடுக்கையே வளிமண்டலம் என்கிறோம். இதில் அதிகளவு நைட்ரஜன், ஆக்சிஜன் சிறிதளவு பிற வாயுக்களும் காணப்படுகின்றன. பூமியைச் சுற்றிக் காணப்படும் இவ்வடுக்கு, பூமியைச் சூரியக் கதிர;வீச்சில் இருந்து நம்மைப் பாதுகாப்பதோடு இப்புவியில் உயிரினங்கள் வாழ வழிவகுக்கிறது. தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள்கள் வளிமண்டலத்தில் கலக்கும் பொழுது மாசுபடுதல் ஏற்படுத்துகிறது.
1. நிலம், நீர்காற்று ஆகியவற்றின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றம்
- மாசுபடுதல்
2. டிசம்பர் 1984-ல் யூனியன் கார்பைடு கம்பெனியின் உரத்தொழிற் சாலையிலிருந்து வெளியான நச்சுத்தன்மை வாய்ந்த ............. வாயு, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது.
- மீத்தைல் ஐசோசயனேட்டு (IMC)
3. நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர;கள், அங்குள்ள கார;பன் துகள்களைச் சுவாசிப்பதால் ஏற்படும் நோய்
- நுரையீரல் புற்றுநோய்
4. காற்று மாசுபடுதலுக்கு முக்கிய காரணம்
- வாயுக்கள் மற்றும் நுண்துகள்கள்
5. புதைபடிவ எரிபொருள்களை முறையாக எரிக்கப்படாததால், உருவாகும் வாயு எது?
- கார;பன் மோனாக்சைடு
6. நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்களை எரிக்கும்போது ................. உருவாகின்றன.
- ஹைட்ரோ கார;பன்கள்
7. மீத்தேன் போன்ற ஹைட்ரோ கார;பன்கள் .................. மாசுபடுவதற்கு காரணமாகின்றன.
- காற்று
8. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளிவரும் ............... வாயு, காற்றில் கலந்து, மழைநீரில் கரைந்து, அமில மழையாகப் பொழிகிறது.
- கந்தக டை ஆக்சைடு
9. தாவரங்களில் குளோரோசிஸ்(பச்சைய இழப்பு), நெக்ரோசிஸ்(திசுக்கள் இறப்பு) போன்ற பாதிப்புகள் ஏற்படக் காரணம்
- அமிலமழை
10. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், காற்று செம்பழுப்பு நிறமாக மாறக் காரணமான வாயு எது?
- நைட்ரஜன் ஆக்ஸைடு
11. தாவரங்களின் பச்சையத்தை அழித்து ஒளிச்சேர;க்கையின் அளவையும், வளர;ச்சி வீதத்தையும் வெகுவாகக் குறைக்கும் வாயு எது?
- பெராக்ஸி அசிடைல் நைட்ரேட் (PAN)
12. கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஆக்சிகரணம் அடைந்து, உருவாகும் வேதிப்பொருள்
- நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம்
13. புற்றுநோயை உண்டாக்கும் நச்சு வாயு எது?
- பென்சோ பைரின்
14. கடல் நீரில் ஹைட்ரோ கார்பன்கள் அடங்கிய பெட்ரோலியப் பொருள்கள் கலப்பதனால் ஏற்படும் நிகழ்வு
- எண்ணெய்க் கசிவு
15. சூடோமோனாஸ் பாக்டீரியாவை மரபுப் பொறியியல் மூலம் மாற்றி எண்ணெய்க் கசிவை அகற்றுவதற்குப் பயன்படுத்த முடியும் எனக் கண்டறிந்தவர் யார்?
- டாக்டர; ஆனந்த மோகன் சக்ரபர;த்தி
0 Comments